விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர், நடிகரும், தொகுப்பாளருமான தாடி பாலாஜி.இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார்.
இவருக்கும் இவருடைய மனைவி நித்தியாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது. ஆனால் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றாலும் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி நித்யாவை சமாதான படுத்துவதற்காக தாடி பாலாஜியும் கலந்து கொண்டார். ஆனால் முதலில் சமரசம் ஆவது போல், தெரிந்தாலும், பிறகு அதுவும் பிரச்சனையில் தான் முடிந்தது. எனவே இப்போது வரை இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்துவருகிறார்கள்.
இருவரும் மகளுக்காகவாவது மீண்டும் ஒன்றிணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த வேலையில், நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி புகார் தெரிவித்துள்ளார். அதில் தாடி பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த 24-ஆம் தேதி காவல்நிலையத்தில் ஆஜாரானார் பாலாஜி. தனது நண்பரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், உடற்பயிற்சி பயிற்றுநர் பசில் ஆகியோர் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாகவும், உதவி ஆய்வாளர் மனோஜ் தனது மகளிடம் தேவையில்லாத விஷயங்களை கூறி தன்னிடம் சொல்லும் படி தூண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக குற்றச்சாட்டிய தாடி பாலாஜி, இதை நடிகர் கமலே தன்னிடம் ஒருமுறை தெரிவித்ததாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
தன்னுடன் சேர்ந்து வாழப்போவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பேசியது எல்லாம் நடிப்பு என்றும், இந்த பிரச்சனை தொடர்பாக தான் கொடுத்த புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.