தமிழ் சினிமாவில் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் சூர்யா... தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், நடிப்பிக்காக பல்வேறு விமர்சனங்களை பெற்றவர். தன்னுடைய தோல்விகளை வெற்றிப்படிகட்டுகளாக மாற்றி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சில வருடங்களிலேயே நந்தா, பிதாமகன், போன்ற படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.