நடிகர் சௌந்தரராஜா - தமன்னா தம்பதிக்கு பெண் குழந்தை.! அன்பு பரிசோடு வெளியிட்ட புகைப்படம்..!

Published : Nov 14, 2021, 07:53 PM IST

தமிழில் பட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் சொந்தர ராஜாவிற்கு குழந்தைகள் தினமான இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை அன்பு பரிசோடு வரவேற்று புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  

PREV
17
நடிகர் சௌந்தரராஜா - தமன்னா தம்பதிக்கு பெண் குழந்தை.! அன்பு பரிசோடு வெளியிட்ட புகைப்படம்..!

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஜிகர்தண்டா', எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 

27

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். மேலும் திரைப்படங்களை தவிர , சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

37

நடிகர் என்பதை தாண்டி மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர்.  

 

47

இந்நிலையில் இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் பிஸினெஸ் உமன், தமன்னா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

 

 

57

திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது நடிகர் சௌந்தரராஜா, தமன்னா தம்பதிக்கு  இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

 

67

தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் சவுந்தர் ராஜா குழந்தைகள் தினத்தில் தனக்குபெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார்.

 

 

77

மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தர ராஜா, இன்று பிறந்த தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார். இந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories