நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் படு பிசியாகிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதைத் தொடர்ந்து அவர் கைவசம் பத்து தல திரைப்படம் உள்ளது. சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர் சிம்பு பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்திற்காக தீ தளபதி பாடலை பாடி இருந்தார் சிம்பு. தமன் இசையமைப்பில் அவர் பாடிய இப்பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்கிற ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. தமன் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதாலும், விஜய் மீது வைத்திருக்கும் நன்மதிப்பின் காரணமாகவும், சிம்பு சம்பளமே வாங்காமல் இப்பாடலை பாடிக்கொடுத்தாராம்.