படத்தில் நடித்தாலும் சரி நடிக்காவிட்டாலும் சரி தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. சிம்பு - வெக்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.
முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக உள்ள இந்த கதைக்கு ஈஸ்வரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.மாதவன் மீடியா தயாரிக்கும் இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா நடிக்க உள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
கழுத்தில் பாம்போடும், கையில் பேட்டோடும் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் சிம்பு தோன்றிய ஈஸ்வரன் பட மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
லாக்டவுனுக்கு முன்னதாக 100 கிலோ அளவிற்கு எடை கூடி இருந்த சிம்பு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சிம்புவின் லுக்கை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர்.
தற்போது சிம்புவின் ஈஸ்வரன் பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் நிலையில், அவரை நேரில் பார்க்க வேண்டும் என நாளுக்கு நாள் ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அப்படி சிம்பு நேற்று ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை பார்த்து கை அசைக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் உடல் எடையை குறைத்த பிறகு முரட்டு தாடியுடன் மாஸ் லுக்கில் இருக்கும் சிம்புவின் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தன் ஹேட்டர்ஸே இது சிம்பு தானா? என வாய்பிளந்து ஆச்சர்யப்படும் அளவிற்கு ஃபிட்டான தனது உடலை காட்டும் படி டைட் டி- ஷர்ட் அணிந்து மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.
அதுவும் கே.ஜி.எஃப் பட ஸ்டைலிஷ் சிம்பு வைத்திருக்கும் முரட்டு தாடியை பார்த்து கொல மாஸாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.