உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

நடிகை நமீதா திருமணத்திற்கு பின், தற்போது கருப்பு நிற ஹாட் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட்... நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விமர்சங்களுக்கு ஆளாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார்.

இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
மேலும் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு இருந்த போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டர்.
திடீர் என தன்னுடைய திருமணம் அறிவிப்பை வெளியிட்ட இவர், தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆனார். இவர்களுடைய திருமண வாழக்கை குதூகலமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின், தற்போது படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நமீதா. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் தலையில் அடித்து கொண்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Latest Videos

click me!