மறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..! வேற லெவல் நண்பேன்டா ..!

First Published | Oct 29, 2020, 2:26 PM IST

கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, நடிகரும் பிரபல தோல் மருத்துவருமான சேதுராமன் மார்ச் மாதம் 26 ஆம் தேதி, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
 

36 வயதே ஆன இவரது மரணம் பலரை நிலைகுலைய வைத்தது. திரையுலகில் உள்ள பல பிரபலங்களும் சர்மா பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி, பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
மேலும் ஒரு மருத்துவராக, கொரோனா நேரத்தில் எப்படி மக்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும் என, சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தி வந்தார்.
Tap to resize

சேது கடந்த 2016 ம் ஆண்டு உமையாள் என்பவரை திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு சகானா என்கிற பெண் குழந்தை ஒருவரும் உள்ளார்.
சேது இறந்த போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த உமையாளுக்கு சமீபத்தில் தான் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சேதுவே மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக இவர்களுடைய குடும்பத்தினர் இதனை கொண்டாடினர்.
இந்நிலையில், சேதுவின் பிறந்தநாளான இன்று அவருடைய நினைவாக, அவருடைய குடும்பத்தினர், மற்றும் நண்பர் சந்தானம் இணைந்து மிக பெரிய செயலை செய்துள்ளனர்.
அதாவது சேதுவின் நினைவாக... அவரது Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையின் புதிய ECR ரோட்டில் திறந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!