
விஜய் - ஜெயராம் :
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி. இந்த படம் கடந்த 2012-ல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துப்பாக்கியில் விஜயுடன் மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது காமெடி சென்ஸ் ரசிக்கும் விதத்தில் அமைந்தது. இப்படம் 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் பத்து பரிந்துரைகளில் நான்கை வென்றது.
விஜய் - மோகன்லால் :
விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ரவுடி போலீஸாகும் இந்த கதையில் மலையாள சூப்பர் ஹீரோ மோகன்லால் வளர்ப்பு தந்தையாகவும், மதுரை சண்டியராகவும் நடித்து அசத்தியிருப்பார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ. 85 கோடியை ஈட்டியது. இன்றளவும் தந்தை மகன் என்றால் அது சிவனும், சக்தியும் தான் என சொல்லும் அளவிற்கு இருவரது காம்போ பெயர் போனது.
விஜய் - சத்யராஜ் :
விஜய்,சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளத்தை வைத்து எஸ் சங்கர் இயக்கிய நண்பன் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் என்டர்டெயின் செய்தது. இதில் விஜயக்கு வாத்தியாராக வருவார் சத்யராஜ். இவர்கள் சந்திக்கும் தருணங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன. அதோடு நன்கு அறியப்பட்ட நாயகர்களான ஸ்ரீகாந்த், ஜீவா இருவரின் நடிப்பு கவர்ந்திருந்தது. ஆனால் நண்பன் படத்திற்கு பிறகு இவர்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் - பிரபு :
விஜய நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான புலி படத்தில் பிரபல நடிகர் பிரபு, மறைந்த நடிகை ஸ்ரீ தேவி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். காட்டுவாசிகளும், வேதாளமும் என்னும் வித்யாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் குழந்தைகளை கவர்ந்த அளவு விஜய் ரசிகர்களை கவரவில்லை. கலவையான விமரசங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.101 கோடியை குவித்திருந்தது.
விஜய் - எஸ்.ஜே. சூர்யா :
விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டியிருந்த மெர்சல் படத்தை அட்லீ இயக்கி இருந்தார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து பயமுறுத்தியிருந்தார். மருத்துவராக வரும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதன்பிறகு இவர் அதிக படங்களில் வில்லனாக தான் கமிட் ஆனார். இந்த படம் ரூ.260 கோடியை வசூலித்தது.
விஜய் - விஜய் சேதுபதி :
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தது அசத்தி இருந்தார். டார்க் மூவி போல தோன்றும் இந்த படமும் நல்ல விமர்சங்களை பெற்றது. முன்னதாக விஜய், விஜய் சேதுபதி கூட்டணியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்.இந்த படம் ரூ.300 கோடி வரை வசூலை அள்ளி கொடுத்தது.
விஜய் -ஷ்யாம் :
மேற்குறிப்பிட்ட வரிசையில் தற்போது விஜய் 66-ம் இணைந்துள்ளது. வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு ஆண்களுக்கு தம்பியாக நடிக்கிறார். இதற்காக முன்னணி நடிகர்களை நாடி வருகிறது படக்குழு. இந்நிலையில் விஜயின் அண்ணனாக நடிக்க பிரபல நடிகர் ஷ்யாம் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்ட ஷ்யாமிற்கு போதுமான பட வாய்ப்புகள் தற்போது இல்லை அதோடு துணை வேடங்களிலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களுடன் விஜய் கூட்டணி ஹிட் கொடுத்ததை போல இந்த 66-ம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.