'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!

Published : Nov 28, 2026, 03:59 PM IST

நடிகர் ரமேஷ் கண்ணா பல் மருத்துவமனைக்குச் சென்றபோது உதவியாளர் துணையுடன் தடுமாறி நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
15
நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ

பிரபல நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் 'அவருக்கு என்ன ஆனது?' எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறு தலையிடுவது எந்த வகையில் நியாயம் எனத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனது யூடியூப் சேனலில் அதிருப்தியையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

25
காரில் இருந்து இறங்கச் சிரமப்பட்ட ரமேஷ் கண்ணா

நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு உண்மையிலேயே என்ன ஆனது? 2 நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பல் மருத்துவமனைக்கு வந்தபோது, காரில் இருந்து இறங்குவதற்குச் சிரமப்படுகிறார். உதவியாளர் ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு நடிகராக இருந்தால் அவருக்கு முதுமை வராதா? எப்போதும் இளமையாகத்தான் இருக்க வேண்டுமா? அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தானே. தற்போது அவருக்கு 71 வயதாகிறது. இந்த வயதில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். சிலர் 71 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆனால், எல்லோராலும் அப்படி உடலைப் பராமரிக்க முடியுமா? 25 வயதில் இருந்த உடல் வலிமை 75 வயதிலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? வயது அதிகரிக்கும்போது உடலில் சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். காலில் வலி இருக்கலாம், தசைப்பிடிப்பு இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது உடல்நலப் பிரச்னை இருக்கலாம். உண்மையான காரணம் என்ன என்பது நமக்குத் தெரியாது.

35
துருவித் துருவி ஆராய்வது நியாயமா?

ஆனால், ஒரு நடிகர் தடுமாறி நடந்து சென்றதை வைத்து அவருக்கு என்ன பிரச்னை, என்ன நோய் என்று துருவித் துருவி ஆராய்வது எந்த வகையில் நியாயம்? இன்றைக்குச் சமூக வலைதளங்களில் எதைக் கண்டாலும் அதை ஒரு உள்ளடக்கமாக (Content) மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவர் அமைதியாக இருந்தால்கூட ஏன் பேசவில்லை, அவருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மன அமைதியும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. நடிகர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். அவர்களுக்கும் உடல்நலப் பிரச்சனைகள் வரும்; குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும்; மனக்கவலைகள் இருக்கும். அவர்கள் எப்போதும் கேமரா முன்பு நடிகர்களாகவே இருக்க முடியுமா? அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லையா?

45
மருத்துவமனையில் செல்பி கேட்பது நாகரிகமா?

ஒரு பிரபலம் மருத்துவமனைக்கு வந்தால் அவரிடம் சென்று செல்பி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருடைய குடும்பத்தில் யாராவது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்கும்போது, அந்த வேதனையான மனநிலையில் அவரிடம் சென்று புகைப்படம் கேட்பது எந்த வகையில் நாகரிகம்? நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருமோ, அவை அனைத்தும் நடிகர்களுக்கும் வரும். அவர்களும் வயதாவதால் உடல் மாற்றங்களைச் சந்திப்பார்கள். இந்த எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரபலங்கள் என்றால் அவர்களுக்கு முதுமையும் வரக்கூடாதா? ஒரு நடிகர் வயதான பிறகும் இளமையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதா?

55
தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தேவை

அவருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால் அதைப் பற்றிய தகவலை அறிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதில் தவறில்லை. ஆனால், ஒரு வீடியோவில் அவர் தடுமாறி நடப்பதை வைத்து அவருக்கு என்ன நோய்இருக்கிறது என்று துருவித் துருவி ஆராய்வது சரியல்ல. ஒரு நடிகரின் ஒவ்வொரு அசைவையும் செய்தியாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ரமேஷ் கண்ணாவுக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாமல், அந்த வீடியோவை வைத்துத் தேவையற்ற விவாதங்களை உருவாக்குவது தவறானது.

மனிதர்களாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான நாகரிகம். ரமேஷ் கண்ணாவுக்கு என்ன ஆனது என்று கேட்பதற்கு முன்பு, அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிரபலங்களாக இருப்பதால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை நமக்குச் சொந்தமாகிவிடாது என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories