மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம்! மனைவியுடன் முத்தம் பரிமாறிய புகைப்படத்தை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!

Published : Aug 25, 2021, 01:10 PM IST

நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தன்னுடைய 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியபோது,  மீண்டும் மனைவியுடன் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம்! மனைவியுடன் முத்தம் பரிமாறிய புகைப்படத்தை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!

“ஹாய் செல்லம்” இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம கண் முன்னடி வந்து நிற்கும் முதல் உருவம் நடிகர் பிரகாஷ் ராஜின் முகமாகத்தான் இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய “டூயட்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

26

பின்னர் தெலுங்கு,  இந்தி, கன்னடம், என பல மொழி படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு, கஷ்டங்களை கடந்து தான் தன்னை ஒரு நிலையான நடிகராக நிலைநிறுத்திக்கொண்டார்.

36

மேலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த நடிகை லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
 

46

இதை தொடர்ந்து பிரபல பாடகி போனி வர்மாவை 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் வேதாந்த் என்கிற அழகிய மகன் ஒருவரும் உள்ளார். 
 

56

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் மகன், தன்னுடைய அப்பா - அம்மா இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, ஆசைப்பட்டுள்ளார். இவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக, தன்னுடைய 11 ஆம் ஆண்டு, திருமண நாளில்... மீண்டும் மனைவிக்கு மோதிரம் மாற்றி, மகன் முன்னிலையில் முத்தம் பரிமாறிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
 

66

இதுகுறித்த புகைப்படங்களை தற்போது பிரகாஷ் ராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கொண்டாட்டத்தின் போது, பிரகாஷ் ராஜின் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

click me!

Recommended Stories