Samantha: கனவுல கூட இதை கற்பனை செய்யல! சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றி முதல் முறையாக பேசிய நாகர்ஜுனா!

Published : Dec 06, 2021, 06:00 PM IST

தமிழ் - தெலுங்கு திரையுலகைனர் பொறாமை கொள்ளும் வகையில், நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி, திடீர் என விவாகரத்து பெற்றது, அவரது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. இதுகுறித்து நாகர்ஜுனா பேட்டி ஒன்றியில் பேசியுள்ளார்.  

PREV
16
Samantha: கனவுல கூட இதை கற்பனை செய்யல! சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றி முதல் முறையாக  பேசிய நாகர்ஜுனா!

சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி...  காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே இவர்களது விவாகரத்து குறித்து தகவல் வெளியான போது மௌனம் காத்த இவர்கள், பின்னர் ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் விவாகரத்தை அறிவித்தனர்.

 

26

இவர்களது திருமண முறிவு யாரும் எதிர்பாராத ஒன்று என, நாகசைதன்யா குடும்பத்தினர் மற்றும் சமந்தாவின் பெற்றோர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

36

விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, தற்போது அதில் இருந்து மீண்டு தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கியுள்ளார்.

 

46

இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்ததை தொடர்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார். ஒற்றை பாடலுக்கு கூட ஆட ஓகே சொல்லும் சமந்தா, சம்பள விஷயத்தில் மட்டும் கற்றார் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார் நாகர்ஜுனா.

 

56

ஏற்கனவே நாகர்ஜுனா இவர்களின் பிரிவு குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தாலும், எந்த ஒரு பேட்டியிலும் பேசியது கிடையாது. ஆனால் தற்போது தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த நாகர்ஜுனா, சமந்தா மிகவும் வேகமாக எங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து விட்டார். எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். அனைவருடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனக்கும் என் மனைவிக்கும் ஒரு மருமகளாக இல்லாமல் மகளாகவே இருந்தார்.

 

66

ஆனால் சமந்தா - சைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு வரும் என்பதை நினைக்கவில்லை. அது விவாகரத்து வரை செல்லும் என கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. இருவருமே விட்டுக்கொடுத்து சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சமந்தா என் மகனை விட்டு பிரிந்து விட்டாலும் அவரை என் மகள் போல் தான் நான் பார்க்கிறேன். அவர் அவரது சினிமா கேரியரில் மேலும் மேலும் முன்னேற தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

click me!

Recommended Stories