Uthara Sarath: அழகி போட்டியில் மகுடம் சூடிய மகள்... மகிழ்ச்சியில் கமல் பட நடிகை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள்

Published : Dec 06, 2021, 04:25 PM ISTUpdated : Dec 06, 2021, 05:24 PM IST

அழகி போட்டியில் வெற்றி வாகை சூடிய மகள் உத்தராவின் (Uttara) புகைப்படத்தை, பகிர்ந்து நடிகை ஆஷா சரத் (Asha Sarath) தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  

PREV
16
Uthara Sarath: அழகி போட்டியில் மகுடம் சூடிய மகள்...  மகிழ்ச்சியில் கமல் பட நடிகை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள்

பொதுவாகவே தாய்மார்களுக்கு தங்களின் வெற்றியை விட, அவர்களுடைய பிள்ளைகளின் வெற்றி தான் மகிழ்ச்சியை தரும். நடிகைகள் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன?

 

26

'பாபநாசம்', 'தூங்காவனம்' போன்ற படங்களின் நடிகர் கமலுடன் நடித்துள்ள நடிகை ஆஷா சரத், தனது மகள் உத்தரா அழகிப் போட்டியில் முதல் வெற்றி வாகை சூடிய புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

36

மேலும் இந்த பியூட்டி பேஜட் போட்டியில் உத்தராவிற்கு சாமிங் பியூட்டி என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர். மகளின் வெற்றியை தெரிவிக்கும் விதமாக ஆஷா சரத் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

46

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... 'ஒரு தாயாகவும், ஒரு பெற்றோராகவும் தன் வெற்றியை காண்பது மகிழ்ச்சியான உணர்வு.  வெற்றி தோல்வி என்பது பெரிய விஷயமல்ல. பங்கேற்பு மற்றும் ஒருவரின் நம்பிக்கையை வளர்ப்பது தான் மிகவும் முக்கியம்.

 

 

56

அழகி போட்டியில் சவாலை ஏற்று ராம்ப் வாக் செய்த ஒவ்வொரு போட்டியாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி, பங்கேற்பாளர்களின் பல்வேறு நிலைகளில் நம்பிக்கையை அதிகரிக்க உதவிய நிகழ்ச்சியமைப்பாளருக்கும் தன்னுடைய நன்றிகளை கூறியுள்ளார்.

 

 

66

இந்த அழகுப் போட்டியின் மூலம் "குடும்ப வன்முறை மற்றும் குழந்தைத் துஷ்பிரயோகத்திற்கு வேண்டாம்" என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி, அதன் மூலம் இந்தச் செய்தியைப் பரப்ப உதவிய தாலு கிருஷ்ணதாஸ் அவர்களுக்கு சிறப்பு நன்றி. பங்கேற்பாளர்களின் உற்சாகத்தை உயர்த்துவதில் அற்புதமான ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி.  என இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.

 

 

click me!

Recommended Stories