90 களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முரளி. நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும், கலர் முக்கியம் இல்லை என, நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் பல அவமானங்களை கடந்து பின், திரைத்துறையில் சாதித்த இவருடைய மகன், குடும்பம் பற்றி தெரிந்த பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று உள்ளது.
அது இவருடைய தம்பி டானியல் பாலாஜி பற்றி தான். முரளிக்கு இவர் கூட பிறந்த தம்பி இல்லை என்றாலும், நடிகர் முரளியின் தந்தையரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்.
தன்னுடைய அண்ணன் திரை துறையில் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் கூட திரைப்படங்களில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் டானியல் பாலாஜி இருந்தாலும், இதனை யாரிடமும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை.
பல்வேறு கஷ்டங்களை கடந்து, தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பின்பு தான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
குறிப்பாக, டேனியல் பாலாஜி முரளியின் சகோதரர் என்பதை கூட முரளி இறந்த பிறகே அவர் வெளிப்படுத்தினார்.
நடிகர் விஜயுடன், பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
லோக்கல் கதாபாத்திரமாக இருந்தாலும், ஸ்டைலிஷ் கதாபாத்திரமாக இருந்தாலும் இறங்கி நடிப்பது தான் டானியல் பாலாஜியின் ஸ்பெஷல் .
இவரின் அர்ப்பணிப்போடு கூடிய நடிப்பு தான், இன்று அவரை இந்த அளவிற்கு உயர வைத்துள்ளது. அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.