நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியும் இணைந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்மூட்டி. இவர் தமிழிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். கடைசியாக ராம் இயக்கிய பேரன்பு திரைப்படத்தில் நடித்திருந்தார் மம்மூட்டி. அதன்பின்னர் சுமார் 8 ஆண்டுகளாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த மம்மூட்டியை தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்திருக்கிறார் தனுஷ். அவர் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் மம்மூட்டி. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24
தனுஷின் டி55
அதன்படி தனுஷின் டி55 திரைப்படத்தில் நடிக்க தான் மம்மூட்டி கமிட்டாகி உள்ளார். அப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன்பின்னர் அவர் இயக்க உள்ள படம் இது என்பதால் இதன் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷும், மம்மூட்டியும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
34
டி55 படத்தில் இரண்டு ஹீரோயின்கள்
டி 55 திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க கமிட்டாகி உள்ளனர். அதில் ஒருவர் ஸ்ரீலீலா மற்றொருவர் சாய் பல்லவி. இதில் தனுஷ், சாய் பல்லவி உடன் ஏற்கனவே மாரி 2 படத்தில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் அவர் ஸ்ரீலீலா உடன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளார். தனுஷ் படத்தில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராக இருக்கும் சாய் அபயங்கர் உடன் அவர் கமிட்டாகி உள்ளதால், அவர்கள் காம்போவில் பாடல்கள் எப்படி வரப்போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
டி55 திரைப்படத்தின் நட்சத்திர பட்டாளத்தை பார்க்கும் போதே அப்படம் கன்பார்ம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக மம்மூட்டி இப்படத்தில் இணைந்துள்ளது மிகப்பெரிய ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஜெயிலர் போன்ற பிரம்மாண்ட பட வாய்ப்புகளை நிராகரித்த மம்மூட்டி, இப்படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார் என்றால் நிச்சயம் அதன் கதைக்களம் ஸ்ட்ராங் ஆனதாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.