Karthik Kumar marriage : சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்... தன்னைவிட 16 வயது குறைவான நடிகையை மணந்தார்

Ganesh A   | Asianet News
Published : Dec 13, 2021, 05:43 PM ISTUpdated : Dec 13, 2021, 06:33 PM IST

பாடகி சுசித்ராவின் (suchitra) முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் (Karthik Kumar), நடிகை அம்ருதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

PREV
17
Karthik Kumar marriage : சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்... தன்னைவிட 16 வயது குறைவான நடிகையை மணந்தார்

கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி (Yaaradi Nee Mohini), தெய்வத்திருமகள் உள்பட சில தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தவர் கார்த்திக் குமார் (Karthik Kumar). புகழ்பெற்ற ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இவர் திகழ்ந்து வருகிறார். 

27

பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான சுசித்ராவை (suchitra) திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
 

37

இந்நிலையில், நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார், தற்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். 

47

அதன்படி மேயாத மான், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் (Amrutha Srinivasan) என்பரை கார்த்திக் தற்போது கரம்பிடித்துள்ளார். 

57

சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

67

நடிகர் கார்த்திக் குமாரை விட அவரது மனைவி அம்ருதா ஸ்ரீனிவான் 16 வயது சிறியவராம். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

77

கார்த்திக் குமார் - அம்ருதா தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர்களது திருமண புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

click me!

Recommended Stories