போலீஸ்காரங்களுக்கு லீவு இல்ல‌.. பேச்சு ஒன்னு.. செயல் ஒன்னு.. விஜய் அரசை சாடிய நடிகர் கார்த்தி

Published : Sep 26, 2026, 12:09 PM IST

Karthi vs Vijay: நடிகர் கார்த்தி தவெக ஆட்சியில் பேச்சு ஒன்னு; செயல் ஒன்னு என்ற பொருள்படும்படி அரசை குற்றம்சாட்டியுள்ளார். இவர் திமுக ஆட்சியில் ஏன் வாய் திறக்கவில்லை? என தவெக தொண்டர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

PREV
14
தமிழகத்தில் தவெக அரசு

நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளையும் வீழ்த்தி திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சிக்கு வந்து விட்டது. விஜய்யும் முதல்வராகி விட்டார். தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், தவெக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

விஜய் அரசு மீது கடும் விமர்சனங்கள்

அதிமுகவில் இருந்த எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்த்து குதிரை பேரத்தில் ஈடுபடுவது, தொடர் கொலை, பாலியல் வன்கொடுமை என சட்டம், ஒழுங்கு சீரழிவு, தொடர் மின்வெட்டு என பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி இயக்குநர் அமீர், சத்யராஜ் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் விஜய்யின் தவெக அரசை விமர்சித்து வருகின்றனர்.

24
தவெக அரசை சாடிய நடிகர் கார்த்தி

இந்த நிலையில், பிரபல நடிகர் கார்த்தியும் விஜய் அரசை சாடியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோவையில் முன்னாள் காவல் அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ''இப்போது சமூக வலைத்தள அழுத்தம் காவல்துறைக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஒரு குற்றம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானால் அடுத்த 1 மணி நேரத்தில் அந்த குற்றத்துக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

34
தவெக அரசின் பேச்சு ஒன்னு, செயல் ஒன்னு

இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. காவலர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. ஆனால் இப்போது வந்துள்ள புது அரசு (தவெக அரசு) காவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அது காகித அளவில் மட்டுமே இருக்கிறது. காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு தர வேண்டும்'' என்று தெரிவித்தார். அதாவது காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தவெக அரசு சொல்கிறது. ஆனால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கிறதே தவிர, செயலில் இல்லை. தவெக அரசின் பேச்சு ஒன்னு, செயல் ஒன்னு என்ற பொருள்படும் வகையிலேயே நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

காவலர்கள் புலம்பல்

கடந்த திமுக ஆட்சியில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிகர் கார்த்தி சொன்னதுபோல் இந்த அறிவிப்பு காகிதத்தில் இருந்தாலும் பெரும்பாலான சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. பின்பு ஆட்சிக்கு வந்த தவெக அரசு காவலர்களுக்கு விடுமுறை உறுதி செய்யப்படும் என கூறியது. ஆனால் இதுவும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறதே தவிர, செயல்பாட்டில் இல்லை என காவலர்கள் புலம்புகின்றனர்.

44
திமுக ஆட்சியில் வாய் திறக்காத கார்த்தி

இந்த நிலையை தான் நடிகர் கார்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். நடிகர் கார்த்தி பேசியது நியாயம் தான் என்றாலும் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு புதிய அரசு வந்தவுடன் வாய் திறப்பது ஏன்? என தவெக தொண்டர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். திமுக ஆட்சியில் நடிகர் கார்த்தி இதேபோல் எத்தனை குறைகளை சொல்லி இருப்பார்? என்பதை அவரே லிஸ்ட் போட்டு சொல்லட்டும் என அவர்கள் விமர்சன கனைகளை தொடுக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories