15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது; ஜெயம் ரவி - ஆர்த்தியின் லவ் ஸ்டோரி எப்படிப்பட்டது தெரியுமா?

First Published | Sep 9, 2024, 2:29 PM IST

நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய மனைவியுடனான விவாகரத்தை தற்போது உறுதி செய்துள்ள நிலையில், இவர்களின் லவ் ஸ்டோரி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Jayam Ravi and Aarti

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக ஜெயம் ரவி அறிவித்ததை தொடர்ந்து... இவர்கள் இருவரின் காதல் கதை குறித்த தகவல், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 

Jayam Ravi and Aarti

நடிகர் ஜெயம் ரவி, 1989 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு தொட்டில் சபதம்' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், சிறு வயதில் இருந்தே ஹீரோவாக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார். எனவே சிறு வயதில் இருந்தே பாரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், சிலம்பம் போன்ற கலைகளை கற்று கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு, தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கிய 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் வெளியான 'ஜெயம்' என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டது. முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை சதா நடித்திருந்தார். மேலும் கோபிசந்த் வில்லனாக நடித்திருந்தார். 

இசைஞானியின் ஹிட் பாடலை அட்ட காப்பியடிச்சு.. மோகன் லால் படத்திற்காக விருதை தட்டி தூக்கிய இசையமைப்பாளர்!
 

Tap to resize

Jayam Ravi and Aarti

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு... உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட, தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களின் விவாகரத்து செய்தி தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. மேலும் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர். 
 

கடந்த ஒரு வருடமாக ஆர்த்தி - ஜெயம் ரவி பர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளதாகவும் சில சினிமா விமர்சகர்கள் வெளிப்படையாக கூறி வந்த நிலையில், தற்போது நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதன்படி, " இந்த அறிக்கையில்நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி மனைவியுடனான விவாகரத்தை உறுதி செய்த நிலையில், இவர்களது அழகிய காதல் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

கோட்.. கேமியோவில் கலக்கிய த்ரிஷா - ஒரே ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
 

ஆர்த்தியை ஜெயம் ரவி முதல் முதலில், நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த போது ... முதல் பார்வையிலேயே ரவிக்கு ஆர்த்தியை பிடித்து போக, அவரை பற்றிய விவரங்களை தேடி... தேடி சென்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்த்தி மிகவும் பணக்கார பெண்.. ஜெயம் ரவி நடுத்தர வர்க்கத்தில் இருந்து பணக்காரராக மாறியவர். மேலும் ஆர்த்தி கொண்டம் ஆட்டிடியூட் காட்டும் பெண்ணாக இருந்த போதிலும் அவர் மீது இருந்த தீராத காதல், மற்றும் ஜெயம் ரவியின் அனுசரித்து போகும் குணம் இருவரையும் ஃபர்பெட் ஜோடியாக மாற்றியது. எப்படியும் தன்னுடைய காதல் வலையில், ஆர்த்தியை வீழ்த்திய ஜெயம் ரவி, ஆர்த்தியை பார்ப்பதற்காக... தன்னுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குடித்து, அவரை பார்க்க சென்ற நாட்களும் உண்டாம். இதனை அவரே ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

அதே போல் ஜெயம் ரவி ஒரு பிரபலம் என்பதாலும் , இவர்களின் காதல் ஆரம்பத்தில்... இரு வீட்டுக்கும் தெரியாது என்பதால், இவர்களின் டேட்டிங் மிகவும் மோசமான ஒன்று என்பதையும் கூறியுள்ளார். யாராவது பார்த்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் ஹோட்டலுக்கு கூட செல்ல மாட்டார்களாம். காரில் லாங் டிரைவ் கூட போக முடியாது, பல யூடர்ன் எடுத்த நினைவுகளை மறக்க முடியாது என கடந்த ஆண்டு கொடுத்த பேட்டியில் தெரிவித்தனர். தங்களின் மருமகள் குறித்தும் ஜெயம் ரவியின் பெற்றோர் பெருமையாக பேசிய நிலையில்... தற்போது உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டு... இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பின்னர்  இவர்களின் விவகாரம் விவாகரத்தில் வந்து நிற்கிறது.

ஒரே வரியை 4 பாடல்களில் பயன்படுத்திய வாலி! நாளுமே சூப்பர் ஹிட்!

Latest Videos

click me!