மாஸ்க் போட்டு கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக உலா வரும் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படம்!

First Published | Jul 22, 2020, 3:10 PM IST

மாஸ்க் போட்டு கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக உலா வரும் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படம்!

சென்னையில் தற்போது சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், இத்தனை நாள் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்த பிரபலங்கள் முதல் பலர், மாஸ்க் அணிந்து கொண்டு மீண்டும் வெளியில் உலா வர துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், நேற்றைய முன் தினம் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாஸ்க் அணிந்தபடி சொகுசு காரில் கேளம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டிற்கு மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன், மற்றும் பேரன் வேத் ஆகியோருடன் சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
Tap to resize

இதை தொடர்ந்து, தற்போது தளபதி விஜய் தன்னுடைய நண்பர்களுடன் முகத்தில் மாஸ்க் அனைத்து கொண்டு வெளியே வந்துள்ளார். இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
பிசியாக ஷூட்டிங் இருக்கும் சமயங்களில் கூட ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் தளபதி, தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வை, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஜாலியாக போக்கி வருகிறார்.
தன்னுடைய மகள் வெளிநாட்டில் சிக்கியுள்ளன என்கிற கவலையில் இருந்த விஜய் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், நேற்று தான் 14 நாள் தனிமை படுத்துதலுக்கு பின் வீட்டிற்கு சென்று சேர்ந்தார். இதனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் விஜய்.
தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள, மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து திரையரங்குகளுக்கு மூடப்பட்டதால் இந்தப்படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
அதே நேரத்தில், விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும் முதல் படம் இதுவாக கூட இருக்கலாம். காரணம் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு தான்.
அதே நேரத்தில் விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் பற்றியும் அவ்வப்போது பல தகவல்கள் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!