புது கெட்டப்பில் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய அருண் விஜய்... ஷாக்கான இளம் நடிகர்கள்...!

First Published | Aug 25, 2020, 7:10 PM IST

நடிகர் அருண் விஜய் லாக்டவுனில் புதுப்புது கெட்டப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு அசத்தலான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்தே தீரும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் அருண் விஜய்.
தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படம் மூலம் மறு அவதாரம் எடுத்த அருண் விஜய், அதன் பின்னர் தொட்டது எல்லாமே ஹிட்டு தான்.
Tap to resize

தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், சினம், ஏவி 31 என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் தான் கெடா மீசை வைத்துக் கொண்டு வில்லேஜ் படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேற லெவல் போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.
அந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் ஹரி இயக்க உள்ள அருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது கிடா மீசை, தாடி இல்லாமல், நீண்ட கிருதா வைத்து ஆளே அடையாளம் தெரியாமல் எங் லுக்கில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
பார்க்க அப்படியே அச்சு அசலாக ஹாலிவுட்டில் கோடிகளில் வசூலை அள்ளிய பிளாக்பஸ்டர் படமான எக்ஸ்மென் படத்தில் வரும் வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக்மேன் போலவே இருக்கிறார்.

Latest Videos

click me!