நடிகராக திரையுலகில் வெற்றிநடை போடும் உலகநாயகன், அரசியல் கட்சி துவங்கியதை தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல்வாதியாகவும் களம் காண உள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில், குறிப்பிட்ட அவரது சொத்துக்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில், போட்டியிடும் நிலையில், மனு தாக்கல் செய்வதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
பின்னர் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுவில் கமலஹாசன் 2019-2020 ஆம் ஆண்டில் மொத்த வருமானம் 22.11 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தன்னிடம் எந்த விதமான தங்க நகைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அசையும் சொத்துக்கள் 45.09 கோடி என்றும் அசையா சொத்துக்கள் 131.84 கோடி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து தனது மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி என்றும் தனக்கு 49.5 கோடி கடன் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவரங்கள் தற்போது வைரலாகி வருகிறது.