2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பும் நடந்து முடிந்தது.
இந்நிலையில் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு இந்த மாதம் 7 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டனர்.
குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆகும் நிலையில், தற்போது குழந்தையுடன் நடத்தப்பட்ட சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு, மகன் பெயரை அறிவித்துள்ளார்.
அதாவது மஹத் - பிராச்சி தம்பதிகள் தங்கள் மகனுக்கு ’அதியமான் ராகவேந்திரா’ என்ற பெயரை வைத்துள்ளனர். இதர தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.