
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி அருகிலுள்ள புதுகாரியாபட்டி என்ற கிராமத்தி பிறந்தவர் தான் சினேகன். இவருடைய தந்தை சிவசங்கரன். சிறு வயது முதலே சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக சென்னை வந்து, பல ஆண்டுகள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு மாத இதழில் கவிதை தொகுப்புகள் மற்றும் கதைகளை எழுத துவங்கிய சினேகனை படங்களுக்கு பாடல்கள் எழுதுமாறு ஊக்கப்படுத்தியது மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான்.
முடிஞ்சது ரேஸ்; கையில் துப்பாக்கியை எடுத்து குறி வச்ச அஜித்; வைரலாகும் போட்டோஸ்!
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் உருவான புத்தம் புது பூவே என்ற படத்தில் தான் முதல் முதலாக பாடலாசிரியராக அறிமுகமானார் சினேகன். ஆனால் அந்த படம் இறுதி வரை வெளியாகாமல் போனது, அவருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சுமார் 3 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கடந்த 2000மவது ஆண்டு வெளியான "மனு நீதி" என்ற திரைப்படத்தின் மூலம், தேவா இசையில் தான் பாடலாசிரியராக அறிமுகனார் சினேகன்.
அன்று துவங்கி இன்று வரை இந்த 25 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500க்கும் அதிகமான படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். "தோழா தோழா", "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா", "ஆராரிராரோ", "யாத்தே யாத்தே", "சொந்தமுள்ள வாழ்கை" மனசுக்குள்ளே தாகம், கிழக்கே பார்த்தேன் என்று தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் பாடல்களை எழுதியுள்ளார். தோழா தோழா பாடலை எழுதியபோது தனக்கு கிடைக்காத வரவேற்பு, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாட்டிற்கு கிடைத்தது என்று நகைப்புடன் பல முறை கூறியுள்ளார்.
மாமியாரின் பிறந்தநாளில் அன்னதானம் போட்டு அசத்திய பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
கடந்த 2018ம் ஆண்டு 21 பிப்ரவரி அன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் துவங்கியபோது, அக்கட்சியின் முதல் செயற்குழு உறுப்பினராக இணைந்தார். மேலும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 5ம் இடம் பிடித்தார். 2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றில் பங்கெடுத்த அவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி பிரபல நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு கமல் ஹாசன் முன்னிலையில் காதல், கவிதை என்று அழகான பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் தான் சினேகனின் தந்தை சிவசங்கரன் வயது 102 வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். சினேகன் எந்தவொரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவ்வளவு ஏன் வரும் 2026 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு தந்தையிடம் ஆசி பெறுவதாக இருந்தார்.
ஆனால், அதற்குள்ளாக அவரது தந்தை இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில் சிவசங்கரனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக புதுகாரியாபட்டியில் வைக்கப்பட்டுள்ளது.