Ajith Kumar at Kongunadu Rifle Club Rifle Shooting Practice : கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித் குமாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் கார் ரேஸ் போட்டிகளில் ஈடுபட்டு வந்த அஜித் கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். மங்காத்தா, விஸ்வாசம், என்னை அறிந்தால், வேதாளம், அமர்க்களம், வீரம், நேர்கொண்ட பார்வை, குட் பேட் அக்லீ என்று ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
25
அஜித் குமார்
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லீ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.248.25 கோடி வசூல் குவித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த அஜித் துபாய், ஐரோப்பியா நாடுகளில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய நிலையில் இப்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆம், ஜனவரி மாதம் தொடங்கிய கார் பந்தயம போட்டியானது இந்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற போட்டியுடன் நிறைவுற்றது.
35
சினிமாவிலிருந்து விலகிய அஜித்
கிட்டத்தட்ட 10 மாதங்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த அஜித் தனது அடுத்தகட்டமாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆம், திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித்தின் புகைப்படங்களை அவரது மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
45
ஜித் குமார் ரேஸிங்
மேலும் அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் கார் ரேஸ் நிறுவனத்தை தொடங்கி வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்ட அஜித்தின் ஒட்டு மொத்த புகைப்படங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கார் ரேஸை தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு அளவற்றை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பயிற்சியை முடித்த கையோடு அஜித் தனது அடுத்த படத்தின் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் அஜித் கதை கேட்டுள்ளாரா என்ற தகவல் இல்லாத நிலையில், அஜித்தின் கால்ஷீட்டுக்காக பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
55
கொங்குநாடு ரைபிள் கிளப்
அதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒருவர் தான். குட் பேட் அக்லீ படத்தை பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக ஹிட் கொடுத்தாலும் கதை ரீதியாக எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக அடுத்த படத்தை அஜித்திற்கான படமாக மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கான படமாகவும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பிறகு தான் அஜித் தனது அடுத்தகட்ட பணியை தொடங்குவார் என்று தெரிகிறது.