புஷ்பா படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜுன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதே போல் மற்ற நடிகர் - நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, சுனில், மலையாள நடிகர் ஃபஹத் பாசில், பிரகாஷ் ராஜ், தனஞ்சய், ஜெகபதி பாபு மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோரின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.