Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து

Published : May 10, 2022, 01:33 PM IST

Ajith kumar : எச்.வினோத் இயக்கும் ஏ.கே.61 படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏ.கே.62 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

PREV
14
Ajith kumar : தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கும் அஜித்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கொகேன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

24

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

34

இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில், ஏ.கே.62 படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் நடத்துபவராக நடிகர் அஜித் நடிக்க உள்ளாராம். சாதாரண மனிதராக இருந்து கடின உழைப்பால் முன்னேறும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... தப்பித்த கோலிவுட்... டோலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த ராக்கி பாய் - KGF 2 உடன் மோதிய படங்களெல்லாம் ஃபிளாப்

click me!

Recommended Stories