Ajith Bike Trip : BMW பைக்கில் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்... வைரலாகும் AK-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Published : Jun 18, 2022, 12:33 PM ISTUpdated : Jun 18, 2022, 12:34 PM IST

Ajith Bike Trip : ஏகே 61ல் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாத அவர், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாராம்.

PREV
14
Ajith Bike Trip : BMW பைக்கில் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்... வைரலாகும் AK-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

24

அதில் ஒன்று வில்லன் வேடம் எனவும் கூறப்படுகிறது. இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள அஜித், நீண்ட தாடி, காதில் கடுக்கன் என செம்ம கெத்தான தோற்றத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

34

ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டதாம். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் எச்.வினோத்.

44

தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாத நடிகர் அஜித், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாராம். தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள அஜித் அங்குள்ள தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றுள்ளார். விலை உயர்ந்த BMW பைக்கில் அவர் பைக் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... seenu ramasamy : நான் என்ன தப்பு பண்ணேன்... இளையராஜாவின் நிராகரிப்பால் மேடையில் உடைந்து அழுத சீனு இராமசாமி

click me!

Recommended Stories