ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பெருமளவு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாகவே, தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் எந்த இடத்தில் நடத்தினாலும் அங்கு ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள் என்பதால்.... கிராமத்து செட்டை கூட ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைத்து தான் படம் எடுக்க சொல்கிறார் அஜித்.
'வலிமை' படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அஜித், அங்கு காலை நேரங்களில்... முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு சுதந்திரமாக சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கருப்பு நிற ஷாட்ஸ் - டீ- ஷர்ட் அணிந்து நபர்களுடன், பனிக்கு இதமாக டீ குடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, 95 சதவீதம் முடிந்து விட்ட நிலையில்... ஒரே ஒரு சண்டை காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில், அந்த காட்சி படமாக்கப்படும் என, தயாரிப்பாளர் போனி கபூர் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் விரைவில் 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட, போனி கபூர் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.