கழட்டி விட்ட ஆர்யாவை கணவராக நினைக்கும் அபர்ணதி... அவரோட பெயரை எங்க போட்டு வச்சியிருக்காங்க பாருங்க...!

First Published | Sep 30, 2020, 1:52 PM IST

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்ள, பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் பெண் தேடிய நிகழ்ச்சி "எங்கள் வீட்டு மாப்பிள்ளை".
 

'எங்கள் வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிட்ட தட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர்.
இதில் இருந்து இறுதியில் 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
Tap to resize

இந்த நிகழ்ச்சியில் பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்த, அபர்ணதியும் கலந்து கொண்டு விளையாடினர். மற்ற போட்டியாளர்களை விட இவர் தான், ஆர்யாவை சுற்றி சுற்றி வந்து காதலிப்பதாக கண்ணீர் விட்டவர்.
ஆனால் இவர் மீது ஆர்யாவுக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை. எனவே இறுதி போட்டிவரை கூட இவர் செல்லவில்லை. அதற்கு முன்பாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் கூட ஆர்யாவை காதலித்து வருவதாக சுற்றி வந்த இவருக்கு. ஜாக்பாட் அடித்தது போல் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.
அந்த வகையில் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ஜெயில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகள் திறக்க பட்ட பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யாவுக்கு திருமணம் ஆகி, அவர் செட்டில் ஆகி விட்ட பின்னரும்... அவர் நினைப்பில் இருந்து இன்னும் வெளிவராத அபர்ணதி, அவரை கணவர் போலவே நினைத்து இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் பெயருக்கு பின்னல் 6ya என போட்டுள்ளார்.
மேலும் கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காமல் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!