Sabdham Day 1 Collection: ஆதி 'சப்தம்' மூலம் காம்பேக் கொடுத்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Published : Mar 01, 2025, 09:44 AM ISTUpdated : Mar 01, 2025, 09:49 AM IST

Sabdham Day 1 Box Office Collection: இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'சப்தம்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

PREV
15
Sabdham Day 1 Collection: ஆதி 'சப்தம்' மூலம் காம்பேக் கொடுத்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

ஷங்கரின் துணை இயக்குனராக இருந்த, இயக்குனர் அறிவழகன் (Arivazhagan Venkatachalam) 'ஈரம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர். இவர் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை, இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிச்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

25
ஆதி - அறிவழகன் மீண்டும் இணைந்துள்ள சப்தம் திரைப்படம் நேற்று வெளியானது

இந்த படத்தை தொடர்ந்து, வல்லினம், குற்றம் 23, போன்ற படங்களை இயக்குனர் அறிவழகன் இயக்கினார். இந்நிலையில் நேற்றைய தினம், இவர் இயக்கியுள்ள சப்தம் (Sabdham) திரைப்படம் (பிப்ரவரி 28ஆம்) தேதி ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில், ஹீரோவாக ஆதி பின்னிஷெட்டி (Aadhi Pinisetty) நடித்துள்ளார். ஈரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆதியுடன் மீண்டும் அறிவழகன் இணைந்துள்ள இந்த திரைப்படம், திகில் மற்றும் தில்லார் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.

Sabdham : சவுண்டை வைத்து பயம் காட்டினார்களா? பல்பு வாங்கினார்களா? சப்தம் விமர்சனம் இதோ
 

35
நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

இந்த படத்தில், லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம் எஸ் பாஸ்கர், ரெடின்ஸ் கிங்ஸ்லி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஒலியை கொண்டு பயணிக்கும் விதத்தில், மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கி உள்ளார் அறிவழகன். 

45
நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

 லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நேற்று ரிலீசான இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 90 லட்சம் முதல் 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படம் தற்போது, வசூலில் சக்க போடு போட்டு வரும் நிலையில், 'சப்தம்' படத்திற்கும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதால், இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Sabdham : மாறுபட்ட வேடத்தில் சிம்ரன்.. மிரட்டும் லட்சுமி மேனன் - த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர் இதோ

55
சப்தம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்

ஆதி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்காத நிலையில், வில்லனாக மாறினார். ஆனால் சப்தம் திரைப்படம் இவருக்கு சிறந்த கம்பேக் படமாக மாறியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படத்தின் கதையை தாண்டி, தொழில்நுட்பம் ரீதியாகவும், இந்த படம் ரசிகர்ளை கவனிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழை தாண்டி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிபிடத்தக்கது. 

click me!

Recommended Stories