பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ஆர்யன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ச்சியாக தேர்வு செய்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அக்டோபர் 31-ந் தேதி திரைக்கு வந்த படம் ஆர்யன். இப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார். இதில் விஷ்ணு விஷால் உடன் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது.
24
ஆர்யன் படத்தின் கதை
ஒரு லைவ் ஷோ போற செல்வராகவன் செய்யுற ஒரு சம்பவம் அதற்கு பிறகு நடக்கும் தொடர் கொலைகள். அதை விசாரிக்க வரும் விஷ்ணு விஷால் அந்த கொலைகளை தடுத்து நிறுத்தினாரா, கொலைகளுக்கான பிண்ணனி என்ன, உண்மையான கொலையாளி யார் என்பதே ஆர்யன் படத்தின் கதைக்களம். விஷ்ணு விஷால் படம் முழுக்க இறுக்கமாய் வழக்கை விசாரிக்கும் சின்சியர் போலீசாக நடித்து இருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் கீ ரோல். படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். செல்வராகவன்-க்கு இது சைலண்ட் சம்பவம். மனுசன் அசால்ட்டா ஒரு வில்லத்தனம் பண்ணி, அந்த ரோலுக்கு நேர்மை சேர்த்திருக்கார்.
34
வரவேற்பை பெறும் ஆர்யன்
ராட்சசனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள கிரைம் த்ரில்லர் படம் தான் ஆர்யன். இருப்பினும் ராட்சசன் சாயல் இல்லாமல் இப்படம் தனித்து நிற்பதோடு, முக்கியமான மெசேஜையும் சொல்லி இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் வருகிற நவம்பர் 7ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு ரவி தேஜா படம் இந்த வாரம் ரிலீஸ் ஆனதால், ஆர்யன் படத்தின் தெலுங்கு ரிலீஸை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்.
ஆர்யன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.1.17 கோடி வசூலித்து இருந்த நிலையில், இரண்டாம் நாளில் அதைவிட டபுள் மடங்கு வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. 2ம் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 2 கோடி வசூல் ஈட்டி உள்ள ஆர்யன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.3.73 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஆர்யன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.