ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் பாகுபலி தி எபிக் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.
பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் தான் பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அதுவும் சாதாரணமாக அல்ல, அதிலும் ஒரு புதுமையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
24
வரவேற்பை பெறும் பாகுபலி தி எபிக்
இரண்டு பாகங்களையும் ராஜமெளலியின் மேற்பார்வையில், ரீ-எடிட் செய்து 'பாகுபலி - தி எபிக்' என்கிற பெயரில் ஒரே படமாக ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் அக்டோபர் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் போன்ற மாபெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இந்தப் படம், தற்போது பாக்ஸ் ஆபிஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ரீ-எடிட் செய்யப்பட்ட வெர்ஷனில் சில காட்சிகளும் சேர்க்கப்பட்டு உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
34
பாகுபலி தி எபிக் என்ன மாற்றம்?
பாகுபலி தி எபிக் திரைப்படத்தை தற்போது திரையரங்குகளில் பார்க்கும் போதும் புல்லரிப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படம் தமன்னா ரசிகர்களுக்கு தான் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் அவர் நடித்த காட்சிகளை தான் பெரும்பாலும் நீக்கி இருக்கிறார்களாம். சொல்லப்போனால் அவர் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பது போல் காட்டி இருக்கிறார்கள். மற்றபடி, பாடல் காட்சிகளும் சிலவற்றை எடிட் செய்திருக்கிறார்கள். இப்படம் 3 மணிநேரம் 45 நிமிடம் ரன் டைம் கொண்டிருந்தாலும் ஸ்கிரீன்பிளே செம ஸ்பீடாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
பாகுபலி தி எபிக் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் 12.35 கோடியும், வெளிநாடுகளில் 4 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.16.35 கோடி வசூல் ஈட்டி இருந்தது. இரண்டாம் நாளிலும் வசூல் வேட்டையை தொடர்ந்த இப்படம் உலகளவில் ரூ.13.15 கோடி வாரிசுருட்டி இருக்கிறது. இதன் மூலம் ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் ரூ.29.5 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது பாகுபலி தி எபிக். ரீ-ரிலீஸ் படத்திற்கு இந்த அளவு வசூல் கிடைத்துள்ளது இதுவே முதன்முறை ஆகும். இதே வேகத்தில் சென்றால் ரீ-ரிலீஸில் 100 கோடி வசூலை பாகுபலி தி எபிக் எட்ட வாய்ப்பு உள்ளது.