பிரபல நடிகர்கள் ஆதி - நிக்கி கல்ராணிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரும் எதுவும் தெரிவிக்கவில்லை.
மலையாள திரையுலகில் கலக்கி வந்த நிக்கி கல்ராணி, 2015-ம் ஆண்டு ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த த்ரில்லர் படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர் பட்டத்தை பெற்று விட்டார் நிக்கி.
28
nikki galrani
அதோடு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்று தந்தது. திரைப்படங்களின் தொடர்ச்சியான வெற்றி, தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக அவரை மாற்றியது .
38
nikki galrani
மலையாளத்தில் ருத்ர சிம்ஹாசனம் படத்தில் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக கல்ராணி நடித்தார் . இதையடுத்து தமிழ் படமான கோ 2 தமிழ் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
48
Nikki Galrani
விருன்னு, இடியட் , மேரி அவாஸ் ச உள்ளிட்ட மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. இதில் இடியட் படத்தில் ராம்பாலா இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்துள்ளார்.
58
Nikki Galrani
சமீபத்தில் கொரோனா பதிப்பில் இருந்து மீண்டுள்ள நிக்கி கல்ராணி கொழுகொழு அழகை உடற்பயிற்சி மூலம் சிக்கென மாற்றியுள்ளார்.
68
Nikki Galrani
இதற்கிடையே நிக்கி கல்ராணியின் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர் ஆதியை நிக்கி காதலிப்பதாக கூறப்பட்டது.
78
Nikki Galrani
தமிழில் அய்யனார், மிருகம், ஈரம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த ஆதியுடன் நிக்கி காதலை உறுதி படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளியாகின.
88
Nikki Galrani
இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் விழா நடைபெற்றுள்ளதாம். இதில் தெலுங்கு திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.