OTT Thriller : கண்ணாமூச்சி விளையாடிய தாய்... அடுத்த நொடியே மாயமான மகள்! ஓடிடியில் திகில் கிளப்பும் வெப் சீரிஸ்

Published : Oct 11, 2026, 08:34 AM IST

Horror Thriller Web Series : ஓடிடியில் பூர்ணா நடித்த ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வெப் தொடர் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்

ஹாரர், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதைகளுக்கு ஓடிடி ரசிகர்களிடையே எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக அமானுஷ்ய சம்பவங்களுடன் கூடிய கதைகள் பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப்போடும். அந்த வகையில் தற்போது ஓடிடியில் கவனம் ஈர்த்து வரும் ஹாரர் த்ரில்லர் வெப்சீரிஸ் தான் ‘கண்ணமூச்சி’. தொடர்ச்சியான மர்ம சம்பவங்கள், திகிலூட்டும் காட்சிகள் மற்றும் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தொடர் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், ஐஎம்டிபி தளத்திலும் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

OTT Releases : மண்டாடி முதல் அனிமல்ஸ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அரைடஜன் படங்களின் லிஸ்ட் இதோ

24
கதை என்ன?

கணவரை இழந்த பிரியா, தனது காது கேளாத மற்றும் பேச முடியாத மகளுடன் சென்னையில் உள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு குடிபெயர்கிறார். கடந்த காலத்தின் சோகங்களை மறந்துவிட்டு, மகளுடன் அமைதியான வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது.

ஆனால் புதிய வீட்டில் குடியேறிய சில நாட்களிலேயே சூழல் மாறத் தொடங்குகிறது. தாயும் மகளும் விளக்க முடியாத சில விசித்திரமான சம்பவங்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கின்றனர். அந்தக் கட்டிடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருவதால், பிரியாவின் சந்தேகமும் அதிகரிக்கிறது.

34
திடீரென காணாமல் போகும் மகள்

ஒரு நாள் வீட்டில் தனது மகளுடன் பிரியா கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். விளையாட்டின் நடுவே மகள் திடீரென காணாமல் போகிறாள். வீட்டுக்குள்ளேயே குழந்தை இருந்த நிலையில், அவள் எப்படி மாயமானாள் என்பது பிரியாவுக்கு புரியவில்லை. மகளைத் தேடி பதற்றத்துடன் அலைந்து திரியும் பிரியா, எதிர்பாராத சில தடயங்களைப் பார்க்கிறார். மகளின் மாயத்திற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து, அதைத் தேடிச் செல்லத் தொடங்குகிறார்.

மகளைத் தேடும் முயற்சியில் பிரியாவுக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை தொடர்பான மர்மம் அவருக்கு தெரிய வருகிறது. அந்த பழைய கொலைக்கும் தற்போது தனது மகள் காணாமல் போன சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? குடியிருப்பில் நடைபெற்றதாக கூறப்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் இந்த மர்மத்துக்கும் என்ன கனெக்‌ஷன்? காணாமல் போன தனது மகளை பிரியா இறுதியில் கண்டுபிடித்தாரா? என்பதே தொடரின் மீதிக்கதை.

44
5 எபிசோடுகள் மட்டுமே!

இந்தத் தொடரில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகளைக் காணாமல் தவிக்கும் தாயான பிரியாவின் கதாபாத்திரத்தை அவர் ஏற்றுள்ளார். பிரியா தனது மகளைத் தேடும் பயணத்தில் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன. யூனிகான் மற்றும் டிரெண்ட் லவுட் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸ் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தத் தொடரை பார்க்க முடியும். மொத்தம் 5 எபிசோடுகள் மட்டுமே கொண்ட இந்தத் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் சுமார் 20 நிமிடங்கள் நீளமுடையதாக உள்ளது. நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் விறுவிறுப்பான ஹாரர் த்ரில்லர் கதையைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ‘கண்ணமூச்சி’ ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கலாம்.

OTT Movie: ரூ.3 கோடி பட்ஜெட்.. ரூ.60 கோடிக்கு மேல் வசூல்! ஓடிடியில் வெளியாகும் மலையாள கிரைம் த்ரில்லர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories