நடிகர், நடிகைகள் பிரிவிலும் சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகின. 'வெப்பன்ஸ்' படத்திற்காக ஏமி மாடிகன் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்திற்காக ஷான் பென் தட்டிச் சென்றார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'கே-பாப் டீமன் ஹன்டர்ஸ்' படம் வென்றது. இந்த படத்தை மேகி காங், கிறிஸ் ஆப்பிள்ஹான்ஸ், மற்றும் மிச்செல் எல்.எம். வாங் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருந்தனர்.
டெக்னிக்கல் பிரிவுகளிலும் பல படங்கள் விருதுகளை அள்ளின. 'ஃபிராங்கென்ஸ்டைன்' படம் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றது.
குறும்படப் பிரிவில், 'தி சிங்கர்ஸ்' மற்றும் 'டூ பீப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா' ஆகிய இரண்டு படங்களும் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை பகிர்ந்து கொண்டன.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை 'தி கேர்ள் ஹூ க்ரைட் பெர்ல்ஸ்' படம் வென்றது. இப்படியாக, 98வது அகாடமி விருது விழா, சினிமா உலகில் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்வாக பதிவாகியுள்ளது.