2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!

Published : Mar 15, 2026, 07:53 PM IST

Ajith Kumar Car Racing Schedule : அஜித் குமாரின் அடுத்த ஒரு வருடத்திற்கான கார் ரேஸிற்கான அட்டவணையை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

PREV
14
அஜித்குமார் ரேசிங், Ajith Kumar Racing

தமிழ் திரையுலகின் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' மற்றும் தொழில்முறை கார் பந்தய வீரரான அஜித் குமார், மீண்டும் கார் ரேஸில் தீவிரமாக இறங்கியுள்ளது குறித்த செய்திகள் இணையத்தை அதிரவைத்து வருகின்றன. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து அளித்துள்ள பிரத்யேக தகவல்கள் அஜித் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

24
அஜித் குமார் ரேசிங் (AKR) பயணம்

'அஜித்குமார் ரேசிங்' (Ajith Kumar Racing) என்ற சொந்த அணியின் மூலமாக துபாய், அபுதாபி, மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் அஜித் பங்கேற்று வருகிறார். அந்தத் தொடரின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான புதிய அட்டவணையை அவரது குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 20-ம் தேதி தொடங்கி, 2027 ஜனவரி 17-ம் தேதி வரை அவரது அணி பல்வேறு கார் பந்தயங்களில் களம் காண உள்ளது.

34
ரேஸ் ஒரு பக்கம்.. சினிமா மறுபக்கம்!

அஜித் தொடர்ச்சியாக ரேஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால், அவரது அடுத்த படத்தின் நிலை என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "அஜித்குமார் இந்த ஆண்டு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கார் ரேஸிற்கு இடையில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஒரு வருடத்திற்கான கார் ரேஸ் அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

44
ரசிகர்கள் உற்சாகம்

சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவர் மீண்டும் திரைப்படப் பணிகளுடன் ரேஸ் டிராக்கிலும் மின்னத் தயாராகி வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் அடுத்த படமான ஏகே64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories