Oscar 2023 : என்னது ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்தார்களா? - பலரும் அறிந்திடாத 5 டக்கரான தகவல்கள் இதோ

Published : Mar 12, 2023, 08:42 AM IST

உலகின் உயரிய திரைப்பட விருதாக கருதப்படுவது ஆஸ்கார். ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. நாளை 95-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ள நிலையில், அதனைப் பற்றிய 5 டக்கரான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

PREV
15
Oscar 2023 : என்னது ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்தார்களா? - பலரும் அறிந்திடாத 5 டக்கரான தகவல்கள் இதோ

பெரும்பாலானோருக்கு ஆஸ்கார் விருது என்கிற பெயர் தான் தெரியும். ஆனால் அவ்விருதுக்கு இது உண்மையான பெயர் அல்ல. இதன் உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் அகாடமி விருது மெரிட். அகாடமியின் நிர்வாக இயக்குநரான மார்கரெட் ஹெரிக், இந்த விருதின் வடிவத்தை பார்க்கும் போது அது தனது உறவினர் ஆஸ்கார் என்பவரை நினைவூட்டுவதாக கூறினாராம், அதன்பின்னரே இதனை ஆஸ்கார் விருது என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

25

முதல் ஆஸ்கார் விருது விழா, கடந்த 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த நிகழ்வுக்கான டிக்கெட் வெறும் 5 டாலர் மட்டுமே. முதல் ஆஸ்கர் விருது விழா வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

35

ஆஸ்கார் விருது தொடர்பான மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், இந்த விருதை வெல்லும் வெற்றியாளருக்கு அதில் முழு உரிமை இல்லை. விருது வழங்கப்படுவதற்கு முன்பு, அவர் தனது விருதை எங்கும் விற்க முடியாது என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், வெற்றியாளர் தனது விருதினை அகாடமிக்கு மட்டுமே விற்க முடியும். அதுவும் 1 டாலருக்கு தான். இந்த விதி 1950-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்... படக்குழுவினருடன் சண்டை போட்டதால் பரபரப்பு

45

ஆஸ்கார் விருது தொடர்பான மற்றுமொரு விசித்திரமான தகவல் என்னவென்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலோகத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக, ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு அதன் மீது வர்ணம் பூசப்பட்டு அது வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

55

ஹாலிவுட் நடிகர் கெவின் ஓ கானல் என்பவர் தான் ஆஸ்கார் வரலாற்றில் மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். ஏனெனில், அவர் கிட்டத்தட்ட 20 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரால் ஒரு முறை கூட விருதை வெல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு துரதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Rajinikanth: அரசியலுக்கு வராதது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் தெளிவான விளக்கம்!

click me!

Recommended Stories