Aishwarya Rai Bachchan: அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் தோற்றத்தில் இருக்கும் 7 பேர்... அசர வைக்கும் போட்டோஸ்!

Published : Nov 02, 2021, 08:40 PM IST

தென்னிந்திய திரையுலகில் மிக அழகான நடிகைகளில் ஒருவராக அனைத்து ரசிகர்களாலும் வர்ணிக்க படுபவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். நேற்று நவம்பர் 1, ஆம் தேதி தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.  

PREV
18
Aishwarya Rai Bachchan: அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் தோற்றத்தில் இருக்கும் 7 பேர்... அசர வைக்கும் போட்டோஸ்!

1973 இல் மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா ராய், மாடலிங் உலகில் தொடங்கி உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பின்னர் பாலிவுட்டில் நுழைந்து, தற்போது வரை முன்னணி ஹீரோயினாக இவரை கமிட் செய்ய பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

 

சரி இவரை போலவே தோற்றம் அளிக்கும் 7 பேர் குறித்த புகைப்பட தொகுப்புகளை இங்கே பார்ப்போம்...

 

28

மஹ்லகா ஜபேரி:

 

ஈரானிய-அமெரிக்க மாடலான மஹ்லகா ஜபேரி... அசப்பில் நடிகை ஐஸ்வர்யா ராயை ஒத்திருக்கிறார். இதன் காரணமாகவே மஹ்லகா ஜபேரி பல பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இடம்பிடித்துள்ளார். சமூக ஊடங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்தவர்.

 

38

அம்னா இம்ரான்:


பாகிஸ்தானிய பெண்ணான, இவர் மிஸ் யுனிவர்ஸ் ஐஸ்வர்யாவை ஒத்திருக்கிறார். சில வீடியோக்களில், அம்னா இம்ரான் ஐஸ்வர்யாவின் வெற்றிப் படங்களான ஏ தில் ஹை முஷ்கில், தேவதாஸ் மற்றும் மொஹப்பதீன் ஆகியவை போன்றே பிரதிபலித்துள்ளார்.

48

அம்ரிதா சஜு:

 

சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அம்ரிதா சஜு அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே டிக் டாக் வீடியோ போட்டு ரசிகர்களை ஈர்த்தார். இதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பல மலையாள படங்கள் இவருக்கு வரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது.

 

58

ஆஷிதா சிங்:

 

இவரும் நடிகை ஐஸ்வர்யா ராய் போல தோற்றமளிக்கிறார், மேலும் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். ஐஸ்வர்யா ராயின் பிரபலமான டயலாக்குகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் ரீல்களில் உருவாக்குவதிலும் பிரபலமானவர்.

68

சினேகா உல்லால்:

 

2005 இல், லக்கி: நோ டைம் ஃபார் லவ் என்கிற படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அப்போது சினேகா பாலிவுட்டின் இரண்டாவது ஐஸ்வர்யா என்று அழைக்கப்பட்டார். அவரது தோற்றம் சற்றே நடிகை ஐஸ்வர்யா ராய்யில் சாயலில் இருந்தாலும், இவரால் நடிகை ஐஸ்வர்யா ராய் பிடித்த இடத்தை பிடிக்க முடியவில்லை.

78

மானசி நாயக்:

 

மானசி நாயக் ஒரு பிரபலமான மராத்தி நடிகை. லீலே டீன் பாய்கா ஃபஜிதி இகா, துக்யா துக்விலா நாக்யா நாச்விலா, மர்டர் மேஸ்த்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரும் ஒருவகையில் தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை நினைவு படுத்துவார்.

 

88


Amanda Seyfried:

 

ஹாலிவுட் நடிகையான Amanda Seyfried கண்கள் ஐஸ்வர்யா ராயின் கண்களை போலவே பச்சை நிறத்தை கொண்டது. பலர் இவரை அமெரிக்க ஐஸ்வர்யா என்றே அழைக்கின்றனர். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories