குறிப்பாக சூரரைப் போற்று படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கிடைத்தால் அது அவர் வாங்கும் முதல் தேசிய விருதாக இருக்கும். நடிகர் சூர்யா நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், இன்று தேசிய விருது அறிவிப்பில் அவரது பெயர் இடம்பெற்றால் அது அவருக்கான சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.