Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!

Published : Aug 12, 2026, 01:07 PM IST

Family Time : பெரிய ஹீரோக்கள், பிரம்மாண்ட பட்ஜெட், அதிக ஹைப் என எதுவும் இல்லாமல், நல்ல கதையால் மனதை கவர்ந்த இந்த 5 தென்னிந்திய படங்களை குடும்பத்துடன் சேர்ந்து பாருங்கள்.

PREV
15
1.சூடானி ஃபிரம் நைஜீரியா : ஒரு கால்பந்து வீரருக்கும் கேரள குடும்பத்துக்கும் இடையே இப்படியொரு பாசமா?

மலையாளத்தில் வெளியான Sudani from Nigeria, கேரள உள்ளூர் கால்பந்து அணியில் விளையாடும் நைஜீரிய வீரர் காயமடைந்த பிறகு, அவரை வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ளும் கதையைச் சொல்கிறது. கால்பந்து, நகைச்சுவை, மனிதநேயம் என அழகாக நகரும் இந்தப் படத்தை தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற U சான்றிதழும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : Mixer-Grinder : மிக்ஸி ஜாரின் Blade மழுங்கிவிட்டதா? புதிய Blade வாங்கும் முன் இதை செஞ்சு பாருங்க!

25
2. மிடில் கிளாஸ் மெலடிஸ் : ஹோட்டல் வைக்க ஆசைப்படும் ஒரு இளைஞன்... அதை சுற்றி நடக்கும் சுவாரசியக் கதை!

சிறிய ஊரில் காலை உணவுக் கடை நடத்தும் ராகவா, சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் நகரத்திற்குச் செல்கிறார். காதல், குடும்பம், தொழில், பணப்பிரச்சனை என நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை நகைச்சுவையுடன் காட்டும் இந்த தெலுங்குப் படம் தமிழ் டப்பிங் பதிப்பிலும் கிடைக்கிறது.

இதையும் படிங்க : Coriander : வீட்லேயே ஃப்ரெஷ் கொத்தமல்லி வளர்க்கணுமா? இதோ 6 ஈஸி டிப்ஸ்!

35
3. அவனே ஸ்ரீமன் நாராயணா : புதையல் தேடும் போலீஸ்... காமெடியும் மர்மமும் கலந்த வேற லெவல் படம்!

1980களில் நடக்கும் கதையில், ஊரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பழமையான புதையலைத் தேடும் ஒரு வினோதமான போலீஸ் அதிகாரி, கொள்ளைக்காரர்களுடன் மோதுகிறார். ஃபேன்டஸி, அட்வென்ச்சர், காமெடி, மர்மம் என வித்தியாசமான கலவையில் உருவான கன்னடப் படம் இது. தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான படம் என்பதும் கூடுதல் சிறப்பு.

இதையும் படிங்க : Petrol Car : பெட்ரோல் கார்ல தெரியாம டீசல் போட்டுட்டா என்ன ஆகும்? உடனே என்ன செய்யணும் தெரியுமா?

45
4. கவலுதாரி : பல வருடங்களுக்கு முன்பு நடந்த மர்மம்... அதை துப்பறியும் ஒரு போலீஸ்!

கன்னடத்தில் வெளியான Kavaludaari ஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். பெங்களூருவில் சாலை விரிவாக்கப் பணிகளின்போது கிடைக்கும் சில பழைய எலும்புக்கூடுகள், பல வருடங்களுக்கு முன்பு நடந்த மர்மமான சம்பவத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் அதிகாரி மேற்கொள்ளும் விசாரணைதான் கதை. தமிழ் டப்பிங் பதிப்பிலும் கிடைக்கும் இந்தப் படம், குடும்பத்தில் பெரியவர்கள் மற்றும் த்ரில்லர் விரும்புபவர்களுடன் பார்க்க நல்ல Choice.

இதையும் படிங்க : Dishwasher : பாத்திரம் கழுவ கஷ்டமா? கம்மி செலவில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் மெஷின் செய்யலாம்!

55
5. திங்கலாழ்ச்ச நிச்சயம் : ஒரு கல்யாண நிச்சயதார்த்தமும், வீட்டுக்குள் நடக்கும் கலாட்டாவும்!

ஒரு பெண்ணின் திருமண நிச்சயதார்த்தத்துக்காக குடும்பத்தினர் ஒன்று கூடுகிறார்கள். ஆனால், அந்த ஒரு நிகழ்வைச் சுற்றி குடும்பத்துக்குள் உருவாகும் கருத்து வேறுபாடுகள், சின்னச் சின்ன சண்டைகள், நகைச்சுவையான சம்பவங்கள் என கதை முழுவதும் கலகலப்பாக நகர்கிறது. இந்த மலையாளப் படத்துக்கு தமிழ் டப்பிங் பதிப்பும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Mutton : மட்டன் ரப்பர் மாதிரி இருக்கா? பஞ்சு போல வேகனுமா? கடையில் கறி வாங்கும்போதே இந்த 3 விஷயத்தைப் பாருங்க!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories