தமிழே தெரியாமல் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த 5 பாடகர்கள்!

Published : Mar 12, 2025, 12:23 PM ISTUpdated : Mar 12, 2025, 12:31 PM IST

தெரியாத மொழியில் 4 வார்த்தை பேசுவதே மிகவும் கடினம், ஆனால் சில பின்னணி பாடகர்கள் மொழியே தெரியாமல் பாடல்கள் பாடி பிரபலமாகி உள்ளனர். அப்படி மொழியே தெரியாமல் தமிழில் ஏராளமான பாடல்களை பாடிய 5 பின்னணி பாடகர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
15
தமிழே தெரியாமல் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த 5 பாடகர்கள்!
உதித் நாராயணன்:

69 வயதாகும் பின்னணி பாடகர் உதித் நாராயணன், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் என்றாலும், நிலையான இடத்தை பிடிக்க இவர் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. 1988 ஆம் ஆண்டு, அமீர்கான் மற்றும் ஜூஹி சாவ்லா நடித்த 'காயமத் சோ காயமத்  தக்' என்கிற திரைப்படம் இவருக்கு சிறப்பான வரவற்றை வரவேற்பை பெற்று தந்தது.

ஹிந்தியை தாண்டி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி, போன்ற மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இதுவரை நான்கு தேசிய விருதுகளையும், ஐந்து பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ள உதித் நாராயணன், தமிழ் மொழியே தெரியாமல் தமிழில் பாடிய பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்ற பாடல்களாகும். அந்த வகையில் இவர் பாடிய ராங்கி ரங்கம்மா, சோனியா சோனியா, ஐயோ ஐயோ, செல்லம் வாடா செல்லம், நெஞ்ச கசக்கி பிழிஞ்சு போறவளே, வா செல்லம், வாடியம்மா ஜக்கம்மா, போன்ற பாடல்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட்டாக உள்ளது.

25
லதா மங்கேஷ்கர்:

இந்தியாவின் நைட்டி கேர்ள் என்றும் மில்லினியத்தின்  குரல் என்றும் கௌரவப்பட்டங்களை வென்று, எட்டு சகாப்தங்களாக இந்திய இசை துறையில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் லதா மங்கேஷ்கர். 36 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களை பாடி உள்ளார்.

மூன்று தேசிய திரைப்பட விருதுகள், 15 வங்காள திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் விருது, 4 ஃபிலிம் ஃபேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான  விருது, இரண்டு ஃபிலிம் பேர் சிறப்பு விருதுகள், ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றவர். இவர் இசைத்துறைக்கு பங்காற்றியதற்காக பாரத ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதை பெற்ற இரண்டாவது பாடகி என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது. வரலாற்றில் அதிக பாடல்களை பதிவு செய்ய கலைஞராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவருக்கு தமிழ் பேசத் தெரியாது என்றாலும், சில தமிழ் பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் இவர் இசைஞானி இசையில் பாடிய ஆராரோ ஆராரோ மற்றும் வலையோசை பாடல் மிகவும் பிரபலம்.

சுத்தமா தமிழ் தெரியாத ‘இந்த’ பாடகி தமிழில் பாடிய எல்லா பாடல்களும் ஹிட்! யார் இவர்?

35
ஆஷா போஸ்லே:

லதா மங்கேஷ்கரின் சகோதரி தான் ஆஷா போஸ்லே. சகோதரியை தொடர்ந்து தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்களை கட்டி போட்டவர். இதுவரை இரண்டு தேசிய விருது, 4 IFFJ ஜே விருது, 18 மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, உட்பட 9 ஃபிலிம் பேர் விருதுகளையும், பெற்றுள்ளார். அதே போல் மிக உயரிய விருதான  தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு அடுத்தபடியாக,  அதிக பாடல்களை பதிவு செய்ததற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இவர் தமிழில் மொழி தெரியாமலேயே, பாடிய செண்பகமே செண்பகமே, செப்டம்பர் மாதம், நீ பார்த்த இரவுக்கு ஒரு நன்றி, எங்க ஊரு காதலா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், உன்னை நான், போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

45
ஸ்ரேயா கோஷல்:

இவர்களைப் போலவே தமிழ் மொழி தெரியாமலேயே ஏராளமான ஹிட் பாடல்களை தமிழில் பாடி உள்ளவர் தான் ஸ்ரேயா கோஷல். தென்னிந்திய சினிமாவில் உள்ள இளம் பாடகியாகவும், வசீகரம் பொருந்திய குரல் என்றும் போற்றப்படுபவர் ஸ்ரேயா கோஷல். இதுவரை ஐந்து தேசிய விருது, 4 கேரளா ஸ்டேட் விருது, இரண்டு தமிழ்நாடு அரசின் விருது, ஒரு மகாராஷ்டிரா அரசின் விருது, 6 ஃபிலிம் பேர் விருதுகளையும், 10 ஃபிலிம் ஃபேர் அவார்ட் சவுத் என்கிற விருதுகளையும் தட்டிச் சென்றவர்.

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளன. குறிப்பாக முன்பே வா என் அன்பே,  நீதானே பொன்வசந்தம், மன்னிப்பாயா,  உன்னை விட்டா, கண்டாங்கி கண்டாங்கி, அன்பே பேரன்பே,  அம்மாடி அம்மாடி, தேன் தேன் தேன், ஆகிய இவரின் பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

55
சோனு நிகம்:

53 வயதாகும் ஹரியானவை சேர்ந்த பின்னணி பாடகர் தான் சோனு நிகம்.  பாடகர் என்பதை தாண்டி இசையமைப்பாளராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும்,  நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். இதுவரை ஒரு தேசிய விருது, 2 ஃபிலிம் பேர் விருது, இரண்டு ஃபிலிம் பேர் விருது சவுத். 4 IIFA அவார்ட், உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அதேபோல் இவருடைய கலை திறனை கவுரவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நான்கு நான்காவது உயரிய விருதான சிவிலியன் விருதை 2022 ஆண்டு பெற்றார். இதுவரை ஹிந்தி,மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒடியா, இங்கிலீஷ், அசாமி, மலையாளம், குஜராத்தி, போஜ்புரி, நேபாளி, உள்ளிட்ட 32 மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் தமிழில் பாடிய ஆருயிரே, மனசெல்லாம் மழையே, உன் விழியில், வாராயோ தோழி, போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories