Vadachennai 2 Update : தனுஷ் - வெற்றிமாறன் காம்போ என்றாலே படம் கன்பார்ம் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த படங்களில் வடசென்னை படத்திற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
24
Vadachennai 2 Update
வடசென்னை படத்தில் தனுஷுடன் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது சந்தோஷ் நாராயணன் தான். அவரின் இசையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. வடசென்னை படம் முடியும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான லீடு கொடுத்து தான் முடித்திருந்தார்கள். அதன்படி இரண்டாம் பாகம் தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்தின் எழுச்சியை பற்றி பேசும் என்றும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி இரண்டாம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அப்போதில் இருந்தே அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போ ஆரம்பிக்கப்படும் என்பது வெற்றிமாறனிடம் தொடர்ந்து முன்வைக்கப்படும் கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால் தனுஷ் - வெற்றிமாறன் இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டதால், வடசென்னை 2 படத்தில் இருந்து அவர்கள் இருவருமே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
44
Vadachennai 2 Hero Manikandan
வெற்றிமாறனுக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் வட சென்னை 2 படத்தை இயக்க உள்ளதாகவும். மேலும் தனுஷுக்கு பதில் நடிகர் மணிகண்டனை வைத்து வடசென்னை 2 படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன், வடசென்னை 2 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.