கோயம்புத்தூரில், உள்ள எஸ்என்எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியை காண ரசிகர்கள் முண்டியடித்து சென்றதில், 5 பெரி காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் மகன் என்பதை தாண்டி, ஒரு இசையமைப்பாளராக தனக்கென தனி இடம் பிடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா. இவர் முன்னணி இசையமைப்பாளரின் மகனாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே தோல்விகளை கடந்து தான் பின்னர் வெற்றிக்கனியை ருசித்தார். யுவன் ஷங்கர் ராஜா 1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' என்கிற படத்தின் மூலம் தன்னுடைய 16வது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார்.
25
இவர் இசையமைத்த முதல் படம் படு தோல்வியை சந்தித்ததால், இவரது இசை கவனிக்கப்படாமல் போனது. இதை தொடர்ந்து, இவர் அடுத்தடுத்து இசையமைத்த படங்களும் தோல்வியை சந்தித்தது. பின்னர் இவர் இசையில் வெளியான, தீனா, நந்தா, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்களில் இவர் இசை வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
பொதுவாக 90'ஸ் கிட்ஸ்யின் காலர் டியூன் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் தான் உள்ளது. சமீபத்தில் கூட இவர் இசையில் வெளியான திரைப்படங்களான வலிமை, மாநாடு, நானே வருவேன், விருமன் போன்ற படங்களில் இவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் சக்க போடு போட்டது.
45
திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் யுவன் ஷங்கர் ராஜா நடத்தி வருகிறார். அந்த வங்கியில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் நிகழ்ச்சியை காண்பதற்காக அங்கு பலர் திரண்டுள்ளனர்.
பொதுமக்களை கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் கூட்ட நெரிசல் அதிகமானதால், சரவணம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் எஸ்ஐ உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.