சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் யூடியூபர் கிரண். இவர் ரோஸ்ட் பிரதர்ஸ் என்கிற யூடியூப் சேனலில் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைவர் விஜய் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் ப்ரெண்ட்ஸ் படம் பார்க்க வந்த கிரணை மறித்து தகராறு செய்த விஜய் ரசிகர்கள் சிலர், 200 ரூபாய் கொடுத்தால் எங்கள் தலைவரையே விமர்சித்து வீடியோ போடுவியா என அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
யூடியூபர்களை தாக்கிய தவெக-வினர்
இதுகுறித்த புகாரின் பேரில், ஆவடி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பாலகிருஷ்ணன், தனுஷ், அசோக் மற்றும் பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இதே யூடியூபர் ரோகிணி திரையரங்கில் விஜய் ரசிகர்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஸ்ட் பிரதர்ஸ் அண்மையில் விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசியதை விமர்சித்து பேசி வீடியோ வெளியிட்டதால் அவர்களை தவெக-வினர் தாக்கி இருக்கின்றனர்.
கைது செய்த போலீஸ்
அந்த வீடியோவில் விஜய்யை தற்குறி என்றும், அவரது ரசிகர்களும் தற்குறித்தனமான செயல்களை செய்து வருவதாகவும் வீடியோவில் ரோஸ்ட் பிரதர்ஸ் கூறி இருந்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்களான பாலகிருஷ்ணன், தனுஷ், அசோக் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த ரோஸ்ட் பிரதர்ஸை வழிமறித்து அவர்களை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய் ரசிகர்கள் நால்வரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.