ரஜினிகாந்த் பட வாய்ப்பை நான்கு முறை உதறி தள்ளிய பிரபல நடிகை! யார் தெரியுமா ?

First Published Jul 29, 2020, 5:48 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று, நினைக்கும் நடிகைகள் மத்தியில், நான்கு முறை சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிராகரித்துள்ளார் பிரபல நடிகை.
 

அவர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் ஸ்டார் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள, ஐஸ்வர்யா ராய் தான் நான்கு முறை ரஜினிகாந்த் பட வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
undefined
நடிகை ஐஸ்வர்யா ராய், திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பின்பும் கூட பல இயக்குனர்கள் மற்றும், தயாரிப்பாளர்களின் தேர்வாக உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், இவரை 'இருவர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு கொண்டு வந்த, பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வந்தார்.
undefined
பாலிவுட் திரையுலகத்தில் தன்னை நிலைநிறுத்தி கொளவதற்கு முன்பே தமிழ் படங்களில் நடிக்க துவங்கிய இவர், நான்கு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பை நிராகரித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
undefined
நான்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில், ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க படக்குழு இவரை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை, படையப்பா, பாபா, சந்திரமுகி, மற்றும் சிவாஜி ஆகிய படங்கள் தான். ஆனால் ஐஸ்வர்யா ராய் இந்த படங்களின் வாய்ப்புகளை ஏற்கவில்லை.
undefined
இதுகுறித்து ஒரு நிகழ்வின் போது பேசிய ரஜினிகாந்த், சந்திரமுகி படத்திற்காக தன்னை இயக்குனர் தேதி கேட்ட போது முதலில் வடிவேலுவிடம் தேதி வாங்குமாறும், பின்னர் ஐஸ்வர்யா ராய்யிடம் தேதி கேட்குமாறும் தெரிவித்திருந்தார்.
undefined
ரஜினி படையப்பா படத்திற்காக இவரை அணுகியபோது அவர் படு பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. பின்னர் பாபா படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணா வரும் ஒரே ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க அவரை அழைத்த போது அதனை மறுத்துவிட்டார். அதே போல் சிவாஜி பட வாய்ப்பு சென்றபோதும் அவர் பிஸியாக படித்துக்கொண்டிருந்தார் கால் சீட் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
undefined
பின்னர் ஒருவழியாக ரஜினியுடன் எந்திரன் படத்தின் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 2 .௦ படத்தில் ஐஸ்வர்யா ராய் குரல் மட்டுமே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!