Box Office : 3BHK vs பறந்து போ... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டாப்பு யார்? டூப்பு யார்?

Published : Jul 05, 2025, 07:41 AM IST

ராம் இயக்கிய பறந்து போ மற்றும் சித்தார்த்தின் 3BHK ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
3BHK vs Paranthu Po Box Office

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிரடி படங்கள் அதிகம் வந்தாலும், அவ்வப்போது மெய்யழகன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் படங்களும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஒரே நாளில் வெளியான இரண்டு ஃபீல் குட் படங்கள் தான் 3BHK மற்றும் பறந்து போ. இதில் 3BHK திரைப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி இருந்தார். இதற்கு போட்டியாக வெளிவந்த பறந்து போ திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீசுக்கு முன்பே படம் பார்த்த பிரபலங்கள் இரண்டு படங்களையும் ஆஹா... ஓஹோ என வியந்து பாராட்டி இருந்தனர்.

24
பறந்து போ

இதில் ராம் இயக்கிய பறந்து போ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் நடிகை கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தந்தை - மகனின் பாசத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ராம். முதல் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக தயாரிக்கப்பட்ட இப்படம் பின்னர் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதியும், பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜாவும் அமைத்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

34
3BHK

அதேபோல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள 3BHK திரைப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சரத்குமாரும், நடிகை தேவையானியும் சூர்யவம்சம் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இதுதவிர மீதா ரகுநாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்துள்ளார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஒரு மிடில் கிளாஸ் பேமிலியின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே 3BHK படத்தின் கதை. இப்படத்திற்கும் ஆடியன்ஸ் மத்தியில் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

44
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

3BHK ,மற்றும் பறந்து போ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்குமே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருவது 3BHK திரைப்படம் தான். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 கோடி வசூலித்து உள்ளதாம். நேற்று ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளிய படமும் இதுதான். இதற்கு போட்டியாக வெளிவந்த ராமின் பறந்து போ திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்தாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கம்மியான வசூலை ஈட்டி உள்ளது. இப்படத்திற்கு முதல் நாளில் இந்தியாவில் வெறும் 42 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாம். இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் பறந்து போ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories