கடந்த ஜனவரி மாதம், விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அதிரடி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படம், 50 சதவீத இறக்கைகளுடன் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனாலும், இரண்டே நாட்களில், 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அமேசான் தளத்திலும் வெளியாகி பல பார்வையாளர்களால் ரசிக்க பட்டு, முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து, இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ள சமீபத்தில், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் மற்றும் மீனா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'திரிஷ்யம் 2 ' திரைப்படம். குறிப்பாக ஒரு இரண்டாம் பாகம் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என, பல இயக்குனர்களுக்கு எடுத்து காட்டாக இந்த படம் எடுக்க பட்டுள்ளதாக சினிமா விமர்சகர்கள் பலர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான 'கர்ணன்' திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் பிரபலமான இந்தியப்படம் என IMDB பட்டியலில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, திரையரங்கில் வெளியானது. திரையரங்கில் எவ்வித வரவேற்பு கிடைத்ததோ... அதே அளவிற்கு ஓடிடி தளத்தில் வெளியான போது இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த பட்டியலில், பிங்க் படத்தின் ரீமேக்காக தெலுங்கில், பவன் கல்யாண் நடிப்பில் இரண்டாம் கொரோனா அலைக்கு முன்பாக வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற 'வக்கீல் சாப்' திரைப்படம் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் ஓடிடில் தளத்தில் வெளியான பல வெப் சீரீஸ்சுகளும் இந்த IMDB லிஸ்டின் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. அதில் குறிப்பாக, சமீபத்தில் நடிகை தமன்னா நடிப்பில், டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 'நவம்பர்' ஸ்டோரீஸ் 5 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.