2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருந்த டாப் 10 தமிழ் பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ...

Published : Aug 07, 2020, 07:17 PM IST

பிரபலங்கள் தங்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட ஏதுவாக உள்ளது இன்ஸ்டாகிராம் பக்கம். பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆண்டு அதிக ஃபாலாவர்ஸ் வைத்திருந்த பிரபலங்கள் பற்றி தொகுப்பு இதோ...  

PREV
110
2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருந்த டாப் 10 தமிழ் பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ...

நடிகை ஸ்ருதிஹாசன்:

நடிகை ஸ்ருதிஹாசன் 11 . 7 மில்லியன் ஃபாலோவர்சுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரது அழகு, விதவிதமாக வித்தியாசமாக வெளியிடும் புகைப்படம் மற்றும் இவர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்பதால் இவர் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு அதிகம்.

210

சமந்தா:

நடிகை சமந்தா 7 . 5 மில்லியன் ஃபாலோவர் வைத்திருப்பதால் இரண்டாவது இடத்தில் உள்ளார். திருமணத்திற்கு பிறகும், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருவதாலும், கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் கவர்ச்சி காட்டுவதாலும், அம்மணிக்கு மவுசு எகிறி போய் உள்ளது.

310

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 

அதிக ஃபாலோவர் கொண்டவர்கள் லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளவர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். இவர் 2019 ஆண்டில் 3 . 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கிறார். இவரின் இசைக்கு மயங்காத ரசிகர்கள் உள்ளார்களா என்ன?

410

அனிருத் மற்றும் ஹிப் ஹாப் ஆதி

3 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் இவர்கள் இருவருமே நான்காவது இடத்தில் உள்ளனர். தொடர்ந்து, இவர்கள் தங்களுடைய ஆல்பம் மற்றும், இசையமைத்து வரும் படங்கள் பற்றிய தகவல்களை கொடுப்பதால், இவர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

510

விஜய்சேதுபதி:

நடிகர் விஜய் சேதுபதி 2 . 1  மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதன் மூலமும், மற்ற நடிகர்களை போல் இல்லாமல், மிகவும் எளிமையாக அனைவருடனும் பழகுவதால் மூலமும், இவர் மீது அன்பை பொழிபவர்கள் அதிகம்.

610

மாதவன்:

நடிகர் மாதவன் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருப்பதன் மூலம் இந்த லிஸ்டில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார். நடிகர் என்கிற பந்தா இல்லாமல், மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் இந்த அழகு நடிகருக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு தான்.

710

சிவகார்த்திகேயன் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையால் ரசிகர்கள் மனதை வென்ற நடிகர், சின்னத்திரையில் இருந்து வந்து, கடின உழைப்பும், நடிப்பின் மீது தீராத ஆசையும் இருந்தால் நிச்சயம் வெற்றி உறுதி என, நிரூபித்த இவர், 1 .9 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.

அதே போல், தமிழ் நாட்டை சேர்ந்த, பிரபல கிரிக்கெட் வீரர், ரவிச்சந்திரன் அஷ்வினும், 1 . 9 மில்லியன் ஃபாலோவர்ஸ்சுடன், 7 ஆவது இடத்தில் உள்ளார்.

810

ஆண்ட்ரியா:

சினிமாவில் கவர்ச்சி புயலாகவும், மேடைகளில் பாடல் பாடும் போது, எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை வசீகரித்து வரும் நடிகை ஆண்ரியா 1 . 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருந்தார். மேலும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர்.
 
910

பிரியாபவானி ஷங்கர் மற்றும் நிவேதா பெத்துராஜ்:

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர் வைத்திருந்தோர் பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ள இரண்டு தேவதைகள் நடிகை பிரியாபவானி ஷங்கரும், நிவேதா பெத்துராஜும் தான். அழகு சிலரை போல் பிரியா பவானி ஷங்கர் சில புகைப்படங்களையும், சூடேற்றும் கவர்ச்சியில் நிவேதா பெத்து ராஜ் பகிர்த புகைப்படங்களும் இவர்களை 1 . 5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் டாப் 10 லிஸ்டில் இடம் பிடிக்க வைத்தது.

1010

ஹரீஷ் கல்யாண் மற்றும் ஜி.வி.பிரகாஷ்

1 .2 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் 10 ஆவது இடத்தை பிடித்தவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் திரையுலகில் வெற்றி கனியை ருசித்து கொண்டிருக்கும் ஹரீஷ் கல்யாண் மற்றும் பல படங்களில் இசையமைப்பாளராக இருந்தது தற்போது ஹீரோவாக கெத்து காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் குமாரும் தான்.

click me!

Recommended Stories