காலிபணியிடங்களை சகட்டுமேனிக்கு அதிகரிக்கும் TNPSC.! இனி வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரிதான் போங்க.!

Published : Nov 19, 2025, 10:12 AM IST

TNPSC, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–II (தொகுதி II & IIA) க்கான காலிப்பணியிடங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதனால் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளது. இது அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு புதிய நம்பிக்கையை  வழங்கியுள்ளது.

PREV
14
இனி ஜாக்பாட் உங்களுக்கு.!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு ‘ஸ்பெஷல் பஸ்’ மாதிரி நல்ல செய்தி வந்திருக்கிறது. TNPSC வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் Group 2 மற்றும் Group 2A பணியிடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு அரசு வேலை கனவை நனவாக்க புதிதான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளது.

24
625 புதிய காலிப் பணியிடங்கள் சேர்ப்பு – மொத்தம் தற்போது 1270!

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–II (தொகுதி II & IIA) வழியாக நிரப்பப்படவிருந்த 645 காலி இடங்களுடன் சேர்த்து, இன்று வெளியிடப்பட்ட புதிய மாற்றச் செய்தி மூலம் 625 பணி இடங்கள் கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, மொத்த Group 2 + Group 2A காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 1270. இந்த அளவு உயர்வு கடந்த சில ஆண்டுகளின் சராசரியைக் கூட மீறியுள்ளது. 2022–2024 இடைப்பட்ட அறிவிப்புகளின் படி ஒரு நிதியாண்டுக்கு வழக்கமாக சுமார் 1254 இடங்கள் தான் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஆண்டு அது தாண்டி 1270 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

34
ஏன் இவ்வளவு அதிகரிப்பு?

அரசுத்துறைகள், புதிய நிர்வாக தேவைகள், காலியாக இருந்த சார் பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர், வருவாய் ஆய்வாளர் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் பணி இடங்கள் அதிகரித்திருப்பது காரணம் என TNPSC தெரிவித்துள்ளதாவது:

அரசுத்துறைகள் இன்னும் கூடுதல் பணி இட விவரங்களை அனுப்பும் பட்சத்தில், கலந்தாய்விற்கு முன்பாகவே மீண்டும் காலி இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, தற்சமயம் 1270 என்றாலும், இந்த எண்ணிக்கை இன்னும் மேலே போகலாம்.

எந்தெந்த துறைகளில் இடங்கள்?

  • சார் பதிவாளர்
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
  • வனவர்
  • முதுநிலை வருவாய் ஆய்வாளர்
  • உதவியாளர்
  • மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகத் துறைகள்
44
வேலைவாய்ப்பின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது!

TNPSC இன்று கொடுத்த அறிவிப்பு தேர்வர்களிடையே எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை தட்டித்தூக்குகிறது. காலிப்பணியிடங்களை சகட்டுமேனிக்கு உயர்த்தும் TNPSC, இனி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அரசு அதிகாரிதான் போங்க!” என்பது போன்ற உணர்வு தேர்வர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த ஆண்டு Group 2 – 2A தேர்வு எழுதியவர்கள், வரவிருக்கும் மேயின் தேர்வுக்கான தயாரிப்பை இன்னமும் தீவிரமாக்கிக்கொள்ள வேண்டிய நேரம்..ஏனெனில் இந்த ஆண்டு அரசு வேலைவாய்ப்பின் கதவு இன்னும் விசாலமாக திறக்கப்பட்டுள்ளது!

Read more Photos on
click me!

Recommended Stories