Job Vacancy: ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு செம சான்ஸ்.! வாகன உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை காத்தருக்கு.!

Published : Nov 19, 2025, 06:57 AM IST

Rane TRW Steering Systems நிறுவனம் புதுக்கோட்டையில் புரொடக்ஷன் அசிஸ்டன்ட் பணிக்காக 20 காலியிடங்களை அறிவித்துள்ளது. அனுபவம் தேவையில்லாத இந்த பணிக்கு ITI, டிப்ளமோ, டிகிரி படித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
செமத்தியான வேலை காத்திருக்கு.!

Rane TRW Steering Systems Pvt Ltd என்பது உலகத் தரமான வாகன பாதுகாப்பு சாதனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனம். ZF Automotive நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இந்த நிறுவனம், சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து, மெசடீஸ் பென்ஸ், வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா, ஹூண்டாய், மஹிந்திரா, ஹோண்டா, மாருதி சுசுகி, ரெனால்ட் போன்ற உலகப் பிரபல வாகன நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. தரமும் பாதுகாப்பும் மிக முக்கியம் எனக் கருதப்படும் இந்த நிறுவனத்தில் பணிபுரிவது, தொழில் வளர்ச்சிக்கான ஒரு பெரிய வாய்ப்பாகும்.

24
எக்பீரியன்ஸ் தேவையில்லை

தற்போது இந்நிறுவனம் Production Assistant பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. உற்பத்தித்துறையில் ஆர்வமும், உழைப்பும், வளர்ச்சிக்கான விருப்பமும் கொண்ட இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. 

மாதம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும் இந்த பணியில், ITI, டிப்ளமோ, அண்டர் கிராஜுவேட், போஸ்ட் கிராஜுவேட், BE/B.Tech போன்ற எந்த துறையில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, எக்பீரியன்ஸ் தேவையில்லை என்பதால் புதியவர்களுக்கு இது ஒரு துவக்க வாய்ப்பு.

34
இதுதான் வேலை, வயது வரம்பு

பணியிடமாக புதுக்கோட்டை குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 18 முதல் 30 வயதிற்குள் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன. தொழிற்சாலையில் உற்பத்தி செயல்முறைகளை கண்காணித்தல், சரியான நேரத்தில் பொருட்களை தொகுத்தல், இயந்திரங்களை கவனித்தல் போன்ற பொறுப்புகள் இதில் அடங்கும். உற்பத்தித்துறைக்கு தேவையான அடிப்படை தொழில்நுட்ப அறிவு, குழுவாகச் சேர்ந்து பணிபுரியும் திறன், நேர்த்தி, பொறுப்புணர்வு போன்ற திறன்கள் இருந்தால் போதுமானது.

44
உடனே விண்ணப்பிக்க வேண்டும்

500–1000 ஊழியர்களைக் கொண்ட பெரிய தனியார் நிறுவனமாக விளங்கும் Rane TRW Steering Systems, வளர்ச்சிக்கும், பணிநிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிப்பதால், இங்கு பணிபுரிவது தொழில் வாழ்வில் முன்னேற விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் 19-11-2025 வரை திறந்திருக்கும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories