Job Vacancy: படிப்பு தேவையில்லை.! ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.! உணவு, தங்கும் இடத்துடன் சென்னையில் வேலை.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Published : Nov 19, 2025, 06:26 AM IST

சென்னையில் உள்ள Zepto Marketplace நிறுவனத்தில் 100 டெலிவரி பார்ட்னர் காலியிடங்கள் உள்ளன. மாதம் ₹50,000 வரை சம்பளம், தங்குமிடம், உணவு, காப்பீடு இலவசம். படிப்பு அவசியமில்லை மற்றும் மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

PREV
13
மொத்தம் 100 காலியிடங்கள்

சென்னையில் பிரபலமான Zepto Marketplace Private Limited நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னர்கள் தேவைப்படுகின்றனர். படிப்பு தேவையில்லாமல், 18 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி வேலை நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வழங்கும் பொறுப்பே இதுவாகும்.

23
அம்மாடி, இவ்ளோ சம்பளமா?

இந்த வேலைக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும். சராசரியாக மாதம் ரூ.40,000 வரையும் சம்பாதிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வாராந்திர ஊதியம், தினசரி & வாராந்திர இன்சென்டிவ்கள், சேரும் போது அதிகபட்சம் ரூ.10,000 வரை ஜாயினிங் போனஸ் என பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

33
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இதைத் தவிர, தொழிலாளர்களுக்காக தங்குமிடம் + தினமும் 3 நேர உணவு ஆகியவை வழங்கப்படும். மேலும், e-Bike வசதியும் வாடகை அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்காக ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஓட்டுநர் உரிமம் (DL) அல்லது LLR
  • ஆதார் கார்டு (soft copy)
  • PAN கார்டு (soft copy)

கேட்க முடியாத அல்லது காது கேளாத மற்றும் பேச முடியாத (Deaf, Deaf & Mute) விண்ணப்பதாரர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தொடர்பு: 8760903657

Read more Photos on
click me!

Recommended Stories